போட்டி போட்டு மரியாதைசெய்த இரு அணிகள் | honour the prime minister by admk two groups

வெளியிடப்பட்ட நேரம்: 03:28 (28/07/2017)

கடைசி தொடர்பு:08:37 (28/07/2017)

போட்டி போட்டு மரியாதைசெய்த இரு அணிகள்

முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் மணிமண்டபத்தை ராமேஸ்வரத்தில் திறந்துவைத்துவிட்டு டெல்லிக்குத் திரும்பும் வழியில், மதுரை விமான நிலையத்துக்கு வந்த பிரதமர் மோடியை, அ.தி.மு.க. அமைச்சர்களும் ஓ.பி.எஸ். அணியினரும்  சிறப்பான முறையில் வழி அனுப்பிவைத்தனர். பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் இரண்டு தரப்பினரையும் சந்திக்க அனுமதித்தனர். இதன்மூலம், இரு அணிகளும் பி.ஜே.பி. கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது உறுதியானது.

sellur raju

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மதுரை விமான நிலையத்தில் கவர்னர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள்,  காவி வண்ணத்தில் ரோஜா பூங்கொத்து கொடுத்து வழியனுப்பினர். செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் இருவரும் எம்.ஜி.ஆர். வரலாற்றுப் புத்தகத்தை பிரதமருக்கு வழங்கினார்கள். அப்போது, செல்லூர் ராஜுவிடம் புத்தகத்தைப் பற்றி விளக்கம் கேட்டார். பிரதமரையும் நம் அமைச்சர்  கவர்ந்துவிட்டார் என்று கட்சியினர் கூறினார்கள். எம்.எல்.ஏ. ராஜன்செல்லப்பா, மீனாட்சி அம்மன் கோயில் பிரசாதம் வழங்கினார். இதேபோல ஓ.பி.எஸ்ஸும் தன்னுடைய ஆதரவு எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்களோடு விமான நிலையத்தில் அவருக்கு பொன்னாடை போர்த்தி வழி அனுப்பிவைத்தார். அ.தி.மு.க-வின் இரண்டு அணிகளின் சிறப்பான மரியாதையைப் பார்த்து பிரதமர் மகிழ்ச்சியடைந்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க