வெளியே தலைகாட்டியது உலகின் மிகப் பெரிய நீர்மூழ்கிக் கப்பல்!

ஷ்யக் கடற்படை தினம், வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நடைபெற உள்ள பயிற்சியில் பங்கேற்க, உலகின் மிகப் பெரிய நீர்மூழ்கிக் கப்பல் The Dmitry Donskoy,  செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு வந்துள்ளது. ரஷ்யாவுக்குச் சொந்தமான இந்தக் கப்பல், 120 நாள்கள் மேற்பரப்புக்கு வராமல் நீருக்குள்ளேயே இருக்கும் திறன் படைத்தது. கடலுக்கு அடியில் 400 மீட்டர் ஆழம் வரை செல்லக் கூடியது.  175 மீட்டர் நீளமும் 23 மீட்டர் அகலமும்கொண்ட, இந்த நீர்மூழ்கிக் கப்பலின் வேகம், தண்ணீருக்கு மேல் 22 நாட்டிக்கல் மைல். தண்ணீருக்குள் 27 நாட்டிக்கல் மைல் ஆகும். இந்தக் கப்பலில் 160 பேர் பணிபுரிகின்றனர். 

உலகின் பெரிய நீர்மூழ்கிக் கப்பல்

சுமார் 20 அணுஆயுதங்கள், 200 அதிநவீன ஆயுதங்களைச் சுமந்துசெல்லும் இந்தக் கப்பல், Typhoon-class  ரகத்தைச் சேர்ந்தது. இந்த நீர்மூழ்கிக்  கப்பல், 1981-ம் ஆண்டு ரஷ்யக் கடற்படையில் சேர்க்கப்பட்டது. கப்பலில் இரு சிறிய அணுஉலைகள் உள்ளன.  இதன் கட்டுமானத்துக்கு அதிக செலவு பிடிப்பதால்,  2012-ம் ஆண்டுடன் இந்த ரக நீர்மூழ்கிக் கப்பல்கள் கட்டப்படுவது நிறுத்தப்பட்டது.  மாஸ்கோ நகரை வடிவமைத்த  இளவரசர் Dmitry Donskoy (1359-89) பெயரில் அழைக்கப்படும் இந்தக் கப்பல்தான், தற்போது பணியில் உள்ள நீர்மூழ்கிக் கப்பல்களில் மிகப் பெரியது.

ரஷ்யக் கடற்படைத் தினத்தன்று செயின்ட் பீட்டர்ஸ்பர்க் கடற்பகுதியில் 100 கடற்படைக் கப்பல்கள் பயிற்சியில் பங்கேற்கின்றன. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!