விடுதலைப்புலிகள் தடை நீக்கத்துக்கு உண்மையான காரணம் யார்?

நியூயார்க் இரட்டைக் கோபுரங்கள் தகர்ப்புக்குப் பின், ஐரோப்பிய ஒன்றியம் 22  தீவிரவாதக் குழுக்கள் பட்டியலை வெளியிட்டது. அதில், 13 பேர் தனி நபர்கள். இந்தப் பட்டியலில் 2003-ம் ஆண்டு, பாலஸ்தீன விடுதலை அமைப்பான 'ஹமாஸ்' சேர்க்கப்பட்டது. 2006-ம் ஆண்டு, விடுதலைப்புலிகள் அமைப்பு சேர்க்கப்பட்டது. 'விடுதலைப்புலிகள் அமைப்பு என்பது ஒரு போராட்ட அமைப்புதான், தீவிரவாத அமைப்பு இல்லை ' என்கிற கோரிக்கையுடன்  ஐரோப்பிய வாழ் தமிழர்கள் சட்டரீதியாகப் போராடிவந்தனர். ஏனென்றால், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக எந்த ஒரு போராட்டத்தைக் கையில் எடுத்தாலும் அவர்கள்மீது தீவிரவாதிகள் என்றே முத்திரை குத்தப்பட்டது.  

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக போராட்டம்

2011-ம் ஆண்டு, ஸ்விட்சர்லாந்தில் வசிக்கும் லதன் சுந்தரலிங்கம், கனடாவில் பெயர் விவரம் தெரியாத இன்னொருவரும் முதல்கட்ட முயற்சியை மேற்கொண்டனர். ஆனால், ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் விதிகளின்படி, 'விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் மட்டுமே வழக்குத் தொடுக்க முடியும் ' எனக் கூறப்பட்டது.  டென்மார்க்கைச் சேர்ந்த விடுதலைப்புலி உறுப்பினர்கள் இருவரும் மற்றொரு ஐரோப்பிய நாட்டில் வசிக்கும் ஒருவர் என மூன்று பேர் வழக்குத் தொடுக்க முன்வந்தனர்.  வழக்குச் செலவும் மிக அதிகம். 

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக தீர்ப்பு

 

ஐரோப்பிய வாழ் தமிழர்கள்,  வழக்குச் செலவுக்காக நிதியும் திரட்டி வழங்கினர். நெதர்லாந்தில் வசிக்கும் விடுதலைப்புலி அமைப்பின் உறுப்பினரும் வழக்கு நடத்த அதிகமாக உதவியுள்ளார். இவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு, லதன் சுந்தரலிங்கமும் உறுதுணையாக இருந்துள்ளார்.  ஐரோப்பிய நீதிமன்றம் கொடுத்துள்ள தீர்ப்பு நகலில், எல்.டி.டி.ஈ ( டென்மார்க் ) என்றே குறிப்பிட்டுள்ளது.  வழக்கைத் தொடுத்தவர்கள் இன்று வரை முகம் காட்டவில்லை. அதேவேளையில், வெற்றிக்கு நானே காரணம் என்கிற ரீதியில் லதன் சுந்தரலிங்கம் பேட்டி தருவதால், இலங்கைத் தமிழர்களிடையே  சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 2014-ம் ஆண்டு, இந்த வழக்கிலி  ருந்து லதன் சுந்தரலிங்கம் முற்றிலும் விலகிக்கொண்டதையும் இலங்கைத் தமிழர்கள் குறிப்பிடுகின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!