கமலின் அரசியல் பிரவேசம் ரஜினிக்குப் போட்டியா?

கமல்ஹாசன்

டிகர் ரஜினிகாந்த் கடந்த மே மாதம் அவருடைய ரசிகர்களைச் சந்தித்தார். அரசியல் பிரவேசத்துக்காகத்தான் அவர், ரசிகர்களைச் சந்தித்து வந்தார் என்பது மக்களின் கருத்தாக இருந்தது. இந்த நிலையில், ரஜினியின் அரசியல் ஈடுபாடு குறித்து அரசியல் தலைவர்கள் மற்றும் தமிழ்நாட்டு மக்களிடையே ஆதரவும் எதிர்ப்புமாக கலவையான விமர்சனங்கள் எழுந்தன. இப்போது, நடிகர் கமல்ஹாசன், தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்துப் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துவருகிறார். இதுசம்பந்தமாக அவர் செய்யும் ட்வீட்களுக்கு அர்த்தம் கண்டுபிடிக்கவே புதிய 'அகராதி' தேவை எனும் அளவுக்கு எளிதில் புரியாத வார்த்தைகளைப் பதிவிட்டுவருகிறார். சுப்பிரமணியன் சுவாமியில் ஆரம்பித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரை அனைவரது செயல்பாடுகள் குறித்தும் தன்னுடைய கருத்தை துணிச்சலாக வெளியிட்டு வருகிறார். தற்போது, விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி மூலம், தமிழ்நாட்டு மக்களை வாரம் ஒருமுறை சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் கமல்ஹாசன். இந்த நிகழ்ச்சியில் பேசப்படும் சில சர்ச்சையான வார்த்தைகள் மற்றும் இந்நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களது செயல்பாடுகள் ஆகியவை பண்பாட்டை இழிவுப்படுத்துவதாகப் பேசப்பட்டுவருகிறது. இதைத் தொடர்ந்து, கமல்ஹாசன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, ஜிஎஸ்டி பற்றிய ஒரு கேள்விக்குப் பதில் அளித்துப் பேசிய கமல், 'மக்களுக்கு பிரச்னை என்றால், நான் குரல் கொடுப்பேன்' என்றார். 'சிஸ்டம் சரியில்லை என்று ரஜினி சொல்லியிருக்கிறாரே... அதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன...' என்ற கேள்விக்கு, 'சிஸ்டம் சரியில்லை என்பதை முதலில் நான்தான் சொன்னேன்' என்று பதில் அளித்தார். அடுத்ததாக, 'ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால், நண்பராக உங்கள் கருத்து என்னவாக இருக்கும்...' என்று பத்திரிகையாளர்கள் கேட்டனர். 'நியாயமாக இருந்தால்  நல்லது நடக்கும். இல்லையென்றால் என் விமர்சனங்கள் அவருக்கும் பொருந்தும்' என்றார். 

இத்தனை நாள்களாக இல்லாமல், இப்போது திடீரென கமல்ஹாசன், அரசியல் பற்றி தீவிரமாகப் பேசுவதும், தொடர்ந்து கருத்து தெரிவித்து வருவதும் அரசியலுக்குள் அவர் அடியெடுத்துவைக்க முயற்சியா? ஒருவேளை அவர் அரசியலுக்கு வந்தால், தமிழ்நாட்டு மக்கள் அவரிடம் என்ன எதிர்பார்க்கலாம்? என்பதுபோன்ற கேள்விகளுக்குப் பதில் தெரிந்துகொள்ள கீழே இருக்கும் வீடியோவைப் பார்க்கவும்...

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!