பில்கேட்ஸை பின்னுக்குத் தள்ளிய 'அமேசான்' நிறுவன அதிபர்! | Amazon founder Jeff tops in worlds richest man list!

வெளியிடப்பட்ட நேரம்: 12:33 (28/07/2017)

கடைசி தொடர்பு:15:52 (28/07/2017)

பில்கேட்ஸை பின்னுக்குத் தள்ளிய 'அமேசான்' நிறுவன அதிபர்!

உலகிலுள்ள பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த பில்கேட்ஸை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளார் அமேசான் நிறுவன அதிபர் ஜெஃப் பெசோஸ்.

அமேசான்

உலகப் பணக்காரராக திகழ்ந்துவந்த மைக்ரோசாஃப்ட் நிறுவன அதிபர் பில்கேட்ஸின் சொத்து மதிப்பைக் காட்டிலும் அமேசான் நிறுவன அதிபர் ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. தற்போது, பில்கேட்ஸின் சொத்து மதிப்பு 90.7 பில்லியன் டாலராகவும், ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு 90.9 பில்லியன் டாலராகவும் உள்ளது.

உலகம் முழுவதும் அமேசான் நிறுவனத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. ஸ்மார்ட்போன், இணையப் பயன்பாடு அதிகரித்துள்ளதால், அமேசானில் பொருள்களை வாங்குவோர் விற்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன்மூலம், அமேசான் நிறுவனத்தின் மதிப்பு உயர்ந்துள்ளது. உலகின் முன்னணி பணக்காரர் பில்கேட்ஸை, அமேசான் அதிபர் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடிக்க இதுவே காரணம். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க