Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

என் உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்து..! திவ்ய பாரதி அச்சம்

தனக்குத் தொடர்ச்சியாகக் கொலை மிரட்டல்கள் வருவதாக 'கக்கூஸ்' ஆவணப் பட இயக்குநர் திவ்ய பாரதி தெரிவித்துள்ளார்.

divya barathi

ஆவணப் பட இயக்குநர் திவ்ய பாரதி, கடந்த வருடம் 'கக்கூஸ்' என்ற ஆவணப் படம் எடுத்திருந்தார். அந்தப் படம், மலம் அள்ளும் தொழிலாளர்களின் வேதனைகளையும் கஷ்டங்களையும் வெளிப்படுத்தும் விதமாக இருந்தது. அந்தப் படத்திற்கான ட்ரைலர் இணையத்தில் வெளியானவுடனேயே அந்த ஆவணப் படத்தை வெளியிடக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால், இந்த வருடத்தின்  தொடக்கத்தில் 'கக்கூஸ்' படம் வெளியானது.

இந்த நிலையில், 2009-ம் ஆண்டில் திவ்ய பாரதி மாணவியாக இருக்கும்போது போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கிற்காக, அவரைக் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளிவந்தார். இந்த நிலையில், தனக்குத் தொடர்ச்சியாக கொலை மிரட்டல்கள் வருவதாக அவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில்,

'என் இரண்டு நம்பர்களையும் Whats app குழுக்களில் பரவவிட்டிருக்கிறார்கள். நேற்று இரவிலிருந்து 10 நிமிடத்திற்கு ஒருமுறையென அழைப்புகள் வருகின்றன. எடுத்துப் பேசத் தொடங்கியவுடன் பாலியல் ரீதியாகக் கடுமையாகப் பேசினர். நிர்வாணமாய் நிறுத்தி வெட்டிக் கொலை செய்வோம் என்று மிரட்டினர். இது குறித்து மேற்கொண்டு முகநூலில் பதிவிட வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் தொலைப்பேசி அழைப்புகளின் வன்முறை கூடிக்கொண்டே இருப்பதால், என் உயிருக்கோ, உடைமைக்கோ எந்தப் பாதிப்பு ஏற்பட்டாலும் அதற்கு அந்த அமைப்புகளே காரணம் என்பதை பொது வெளியில் பதிவு செய்ய விரும்புகிறேன். கக்கூஸ் படம் வெளிவந்து 6 மாதம் கடந்த பிறகு, வக்கிர அரசியல் திட்டத்தோடு இன்று இந்தத் தாக்குதல் தொடங்கியிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது' என்று பதிவிட்டுள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close