'நாங்கள் ஒருபோதும் இந்துக்கள் அல்ல!' - கர்நாடக பாணியைக் கையில் எடுக்கும் சீமான் | 'We Are Not Hindus' ,Says Seeman

வெளியிடப்பட்ட நேரம்: 16:52 (28/07/2017)

கடைசி தொடர்பு:12:15 (29/07/2017)

'நாங்கள் ஒருபோதும் இந்துக்கள் அல்ல!' - கர்நாடக பாணியைக் கையில் எடுக்கும் சீமான்

"ர்நாடக மாநிலத்தில் லிங்காயத்துகள் ஒன்றுகூடி நாங்கள் இந்துக்கள் அல்ல என்று புரட்சி செய்வது போல், தமிழகத்தில் நாங்களும் எழுவோம்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சீமான்

'தனிச் சிறுபான்மை மதமாக தங்களை அங்கீகரிக்க வேண்டும்' என்று கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்ட்ராவில் இருந்து ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட லிங்காயத்துகள் கர்நாடகாவில் உள்ள நேரு மைதானத்தில் கடந்த வாரம் ஒன்று கூடி பேரணி நடத்தினர்.

இதில் லிங்காயத் சமூக தலைவர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு லிங்காயத் மடங்களைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். இதன்பின்னர், முதலமைச்சர் சித்தராமையாவைச் சந்தித்து மனு கொடுத்துள்ளனர். 

லிங்காயத்கள் பேரணி

இதுபற்றி சீமானிடம் பேசினோம். " கர்நாடகாவில் பல லட்சம் லிங்காயத்துகள் ஒன்றுகூடி, 'நாங்கள் இந்துக்கள் அல்ல...வீரசைவர்கள்' எனக் கூறி, 'எங்களை தனி மதமாக அறிவிக்க வேண்டும்' என்று பேரணி நடத்தியுள்ளனர். இதே போராட்டத்தை நாங்களும் தமிழ்நாட்டில் தொடங்க இருக்கிறோம். எங்கள் போராட்டத்தில், 'நாங்கள் இந்துக்கள் அல்ல...வீரசைவர்கள்' என அறிவிக்கக் கோருவோம். சிவன், முருகனை வழிபடும் சைவ சமயத்தினராகத்தான் நாங்கள் இருந்து வந்துள்ளோம். ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில்தான் எங்களை இந்துக்கள் என்று பட்டியலில் சேர்த்துவிட்டார்கள். தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருவெம்பாவை ஆகியவைதான் எங்களின் நூல். திருக்குறளே எங்கள் மறை. நாங்கள் ஒருபோதும் இந்துக்கள் அல்ல" என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close