Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சீமைக் கருவேல மரங்களை அகற்றும் நடவடிக்கைக்கு உயர் நீதிமன்றம் க்ரீன் சிக்னல்!

தமிழகத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றும் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடையை நீக்கியது சென்னை உயர் நீதிமன்றம். மேலும், முதற்கட்டமாக நீர்நிலைகளில் உள்ள கருவேல மரங்களை அகற்றலாம் என்று உத்தரவிட்டுள்ளது.

சீமைக் கருவேல மரங்கள் 

தமிழகத்தில் உள்ள கருவேல மரங்களை அகற்ற உத்தரவிடுமாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் தமிழகம் முழுவதும் உள்ள கருவேல மரங்களை இரண்டு மாதங்களுக்குள் அகற்ற உத்தரவிட்டிருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வந்தன.

இதை எதிர்த்து, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் மேகநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து, கருவேல மரங்களை வெட்ட இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இதுகுறித்து ஆய்வு செய்ய 12 பேர் கொண்ட பல்துறை நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது. அவர்கள் தாக்கல் செய்த அறிக்கையின்படி இந்த வழக்கு இன்று (28-ம் தேதி) தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.சுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், அறிக்கையின் சில பகுதிகளை மட்டும் ஏற்பதாகவும், சில பகுதிகளில் மேலும் விளக்கம் தேவைப்படுவதாக அதுகுறித்த கூடுதல் ஆய்வுகளை மேற்கொண்டு பரிந்துரைகளை வழங்க உத்தரவிட்டனர். 

மேலும் பாதிப்புகள் இருப்பதாக அறிக்கை உள்ளதால், இடைக்காலத் தடையை நீக்கி கருவேல மரங்களைப் படிப்படியாக அகற்ற உத்தரவிட்டனர். முதற்கட்டமாக நீர்நிலைகளில் உள்ள கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close