’இருக்கு... இன்னைக்கு சென்னையில் செம்ம மழை இருக்கு’ - வெதர்மேன் ரிப்போர்ட்!

சென்னை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் இன்று இரவு மழை பெய்யக்கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளதாக தமிழகத்தின் வெதர் மேன் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

chennai rain
 

இதுகுறித்து அவர் பகிர்ந்துள்ள ஃபேஸ்புக் பதிவில் ‘‘இன்று 1000% வட தமிழகத்தில் மழை பெய்யும் என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால், நேற்று போல் இன்றும் மழை பெய்ய சாத்தியக் கூறுகள் உள்ளன. இன்று சென்னையில் 50 கி.மீ. தொலைவில் கடல் காற்று வீசிக் கொண்டிருக்கிறது. இன்று இரவு சென்னை மக்கள் குளுகுளு காற்றை உணர்வார்கள். காஞ்சிபுரம் மற்றும் வந்தவாசி இடையே புயல் காற்று வீசக்கூடும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.  

 

 


Do you like the story?

Please Appreciate the Author by clapping!