Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திவாகரனும், தினகரனும் ஒன்று சேர்ந்தால் கழகம் காக்கப்படும்- சொல்கிறார் புகழேந்தி

திவாகரனும், தினகரனும் ஒன்று சேர்ந்தால் கழகம் காக்கப்படும் என கர்நாடக மாநில அதிமுக தலைவர் புகழேந்தி சொல்கிறார். 

திவாகரனும், தினகரனும் ஒன்று சேர்ந்தால்
டிடிவி தினகரன் மாமியார் சந்தானலெட்சுமி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். அவரது இறுதிச் சடங்கிற்கு வந்த கர்நாடக மாநில அதிமுக தலைவர் புகழேந்தி பத்திரிக்கையாளர்களைச் சந்தித்துப் பேசினார், அப்போது, சின்னம்மா சசிகலா, இளவரசி எனக் குடும்பமே கருணாநிதியால் போடப்பட்ட பொய் வழக்குகளால் துக்க நிகழ்ச்சிகளில்கூட கலந்துகொள்ள முடியாத சூழ்நிலையில் சிறையில் இருக்கிறார்கள். மிகவும் வருத்தமாக இருக்கிறது, இதைவிட கொடுமை வேறொன்றும் இல்லை.  இந்த துக்க நிகழ்ச்சிக்கு நான் வந்தபோது, திவாகரன் பக்கத்தில் நான் அமர்ந்தேன், அப்போது திவாகரனும், எங்கள் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் தினகரனும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தது ஆறுதலாக இருக்கிறது.

இன்றைய தினம் புரளிகளுக்கெல்லாம் இன்று விடை கிடைத்திருக்கிறது, என்றுதான் நான் சொல்வேன். அவர்கள் இருவரும் சிரித்துப் பேசிக்கொண்டது எங்கள் கழக வளர்ச்சிக்கும், கழக வரலாற்றிற்கும் இனி வரும் காலங்களில் ஆறுதல் கிடைக்கும் என்பதுதான் எங்களைப் போன்றவர்களுக்கு நம்பிக்கை கிடைத்திருக்கிறது. சின்னம்மா சசிகலா சிறையிலிருந்து விரைவில் வெளிவரவேண்டுமென நினைக்கின்றோம், அதற்கான முயற்சியை எடுத்து வருகிறோம். நீதிமன்றம் நல்ல தீர்ப்பை சொல்ல வேண்டுமென காத்துக்கொண்டிருக்கிறோம் என்றார். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement