வைகை ஆற்றைப் பாதுகாக்க நாங்க ரெடி! நீங்க ரெடியா? அதிர வைத்த விவசாயிகள்!

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் இன்று விவசாயிகள் குறைத் தீர்ப்பு கூட்டம் டி.ஆர்.ஓ குணாளன் தலைமையில் நடைபெற்றது . இதில் மதுரை மாவட்ட விவசாயிகளின் பல பிரச்னைகள் பேசப்பட்டது. விவசாயிகளுக்குத் தேவையான உதவிகள் ஏற்பாடு செய்யப்படும் எனக் கூறி மனுக்களை அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர் .

farmers meeting

பயிர்க் காப்பீட்டில் ஏக்கருக்கு 23ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். ஆனால் 11 முதல் 5வரை தான் வழங்கப்படுகிறது என்று குற்றச்சாட்டுகளை விவசாயிகள் எழுப்பினர். காட்டு மாடுகளின் தொல்லை அதிகமாகிறது அதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர், அதற்கு, மலைப்பகுதிகளில் விலங்களுக்குத் தேவையான தண்ணீர் வைக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது விரைவாக அது போன்ற பிரச்னைகள் தீர்க்கப்படும் என்று கூறினர். கூட்டத்தில் சில விவசாயிகள் எழுந்து "வைகை அணையைத் தூர்வார வேண்டும்,  நகர் பகுதியில் வைகை ஆற்றில் கலக்கும் கழிவு நீரைத் தடுக்க  ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லை என்றால் நாங்கள் தடுக்க முயற்சி எடுக்கிறோம் எங்களுக்குப் பாதுகாப்பாச்சும் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டனர் .

Do you like the story?

Please Appreciate the Author by clapping!