Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 167 பயணிகள்! 

ஜெட் ஏர்வேஸ் விமானம் தரையிறங்கும் நேரத்தில் விமானம் மீது பறவை மோதியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் பத்திரமாக விமானம் ஜோத்பூரில் தரையிறங்கியது. 

விமானம்


மும்பையிலிருந்து ஜோத்பூருக்கு 167 பயணிகளுடன் ஜெட் ஏர்வேஸ் விமானம் பயணம் மேற்கொண்டது. இந்த விமானப் பயணத்தின்போது, விமான ஓட்டுநர் விமானத்தைத் தரையிறக்கும்போது எதிர்பாராதவிதமாக விமானத்தின் மீது ஒரு பறவை வந்து மோதியது. இதனால் விமான ஓட்டுநர் நிலை தடுமாறி அவசர அவசரமாக விமானத்தை தரையிறக்காமல் விமானத்தை மீண்டும் வானில் பறக்கச் செய்தார். இதனால் எந்த ஒரு பாதிப்பும் யாருக்கும் ஏற்படவில்லை. ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்த 167 பயணிகளும், விமானத்தில் பயணம் செய்த குழு உறுப்பினர்களும் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டனர். 

இது குறித்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கூறுகையில், `மும்பையிலிருந்து ஜோத்பூருக்குப் பயணம் செய்த எங்கள் விமானம், ஜோத்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விமானத்தின் முகப்பில் திடீரென ஒரு பறவை வந்து மோதியதால் விமான ஓட்டுநர் நிலை தடுமாறினார். எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த விமான ஓட்டுநர் விமானத்தைத் தரையிறக்காமல், விமான நிலையத்தை மீண்டும் ஒரு முறை சுற்றி வந்து விமானத்தைத் தரையிறக்க முடிவு செய்தார். இதையடுத்து 167 விமான பயணிகளும் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டனர்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close