வெளியிடப்பட்ட நேரம்: 13:22 (29/07/2017)

கடைசி தொடர்பு:13:41 (29/07/2017)

’உங்கள் பக்கம் நான் நிற்பேன்’... ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதிக்கு ஆதரவுக் கரம் நீட்டிய இரோம் சர்மிளா!

கக்கூஸ் ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதிக்கு ஆதரவு தெரிவித்து இரோம் சர்மிளா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

irom sharmila, dhivya
 

சமூக செயற்பாட்டாளரான திவ்யபாரதி கக்கூஸ் என்ற ஆவணப்படம் மூலம் துப்புரவுப் பணியாளர்களின் வேதனைகளைப் பதிவு செய்தார். கக்கூஸ் படத்தைத் திரையிட தமிழக அரசு தடை விதித்தது. ஆனால், இந்த வருடத்தின் தொடக்கத்தில் 'கக்கூஸ்' படம் வெளியானது. தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் கக்கூஸ் ஆவணப்படம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், 2009-ம் ஆண்டில் திவ்ய பாரதி மாணவியாக இருக்கும்போது போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கிற்காக, அவரைக் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளிவந்தார். இந்த நிலையில், தனக்குத் தொடர்ச்சியாக கொலை மிரட்டல்கள் வருவதாக அவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டு வருகிறார்

இதனிடையே இரும்புப் பெண்மணி இரோம் சர்மிளா திவ்ய பாரதிக்கு ஆதரவாக தான் எப்போதும் இருப்பதாகக் கூறியிருக்கிறார். திவ்யபாரதி குறித்து அவர் வெளியிட்ட வீடியோவில் ‘திவ்யபாரதியின் ஆவணப்படத்தைப் பார்த்தேன். அவருக்கு ஆதரவாக எப்போதும் இருப்பேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். 


இரோம் சர்மிளாவின் வீடியோவைப் பார்த்து நெகிழ்ந்து போன திவ்ய பாரதி ‘என் குழந்தைப் பருவத்தில் இருந்தே நான் பார்த்து வியந்த ஆளுமை தோழர் இரோம் சர்மிளா அவர்கள் எனக்கு ஆதரவாக இந்த வீடியோவைப் பதிவேற்றம் செய்திருப்பதைப் பார்த்ததும் நெகிழ்ந்து போனேன். அவரின் அந்தக் குரலில் என் பெயரைக் கேட்டது அப்படியொரு உற்சாகத்தைத் தருகிறது. இன்னும் கடுமையான வேலைகளைத் தொடர்ந்து செய்ய பெரும் பலத்தை அளித்திருக்கிறது. உங்களுக்கு என் பேரன்பு இரோம் சர்மிளா’ என்று ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க