வெளியிடப்பட்ட நேரம்: 16:10 (29/07/2017)

கடைசி தொடர்பு:16:10 (29/07/2017)

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்..!

மத்திய அரசின் கீழ் பணியாற்றச் செல்வதால், முதல்வரின் இரண்டாவது முதன்மைச் செயலாளராக உள்ள ஷிவ்தாஸ் மீனா, நாளை பணியிலிருந்து விடுவிப்புப் பெறுகிறார்.


தமிழக அரசின் முக்கியத் துறைகளில் பணியாற்றும் குடிமைப் பணி அதிகாரிகள், வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். தமிழக அரசின் கூடுதல் செயலாளராக இருந்துவரும் மைதிலி கே.ராஜேந்திரன், பொதுத்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வரலாற்று மற்றும் ஆவணக் காப்பகச் செயலாளர் சித்திக், நிதித்துறைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். முதல்வரின் மூன்றாவது முதன்மைச் செயலாளராக இருந்த விஜயகுமார், இரண்டாவது முதன்மைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். வருவாய்த்துறைச் செயலாளராக இருக்கும் செந்தில்குமார், முதல்வரின் மூன்றாவது முதன்மைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.