புதிய கிரவுண்ட் க்ளீயரன்ஸ் விதிகள், நடைமுறைக்கு வந்தன!

இந்த நாள்வரை, ஒரு காரின் கிரவுண்ட் க்ளீயரன்ஸை, கெர்ப் வெயிட் - அதாவது ஆளில்லாமல் இருக்கும் வாகனத்தை அடிப்படையாகக் கொண்டு அளவிடப்பட்டுவந்தது.

கிரவுண்ட் கிளியரன்ஸ்

இனிமேல், Gross Vehicle Weight - அதாவது கெர்ப் வெயிட் + பே-லோடுடன் கூடிய காரைக்கொண்டு, அதன் கி.க்ளீயரன்ஸ் அளவிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் ஆட்கள் இல்லாத கார், பார்க்கிங்கில் இருப்பதுபோல இருக்கும். இதுவே, நிரம்பிய கார் என்றால், அதன் சஸ்பென்ஷன் கம்ப்ரஸ் ஆகி, காருக்கும் தரைக்குமான இடைவெளியைக் குறைத்துவிடும். இந்தப் புதிய விதியால், ரியல் டைம் கி.க்ளீயரன்ஸ் தெரிந்துவிடும் என்பது பெரிய ப்ளஸ். இதைத் தொடர்ந்து, இதுவரை 205மி.மீ கிரவுண்ட் க்ளீயரன்ஸைக் கொண்டிருந்த அவென்ச்சுரா, தற்போது மாற்றியமைக்கப்பட்ட விதிகளின்படி, 156மி.மீ கிரவுண்ட் க்ளீயரன்ஸையே பெற்றிருக்கிறது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!