எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா: கரூரில் கலெக்டர் தலைமையில் விளையாட்டுப் போட்டிகள்

    கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில், மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கோவிந்தராஜ் தொடங்கிவைத்தார்.      


 

 நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் பேசியபோது, 'மக்கள் சேவையே மகத்தான சேவை' எனத் தொண்டாற்றிய மாமனிதர், மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவர் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இன்று விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. இந்தப் போட்டிகளில் கலந்துகொண்ட வீரர்,வீராங்கனைகள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு,தொடர்ந்து உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கல்வியிலும் அவர்கள் சிறந்து விளங்க வேண்டும். மேலும், மாவட்ட அளவிலும் மாநில, தேசிய, உலக அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று, சிறந்து விளங்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.


விளையாட்டுத் திடலில் நடந்த போட்டிகளில், தடகளப் போட்டியில் 14-17 வயது மாணவ, மாணவிகளும் 19 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு 100 மீட்டர் ஓட்டம்,1500 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் மற்றும் 4*100 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகிய போட்டிகளும், குழுப்போட்டியில் கபடி மற்றும் கோகோ போட்டிகள் மூன்று பிரிவினருக்கும் நடத்தப்பட்டது.

கரூர் மாவட்டத்தில், எதிர்வரும் 04.10.2017 அன்று எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா நடத்தப்பட இருக்கிறது. அதற்கு இடைப்பட்ட காலத்தில், அனைத்து அரசுத் துறைகளையும் இணைத்து, பொதுமக்களுக்கும் சமூக நலனுக்கும் முக்கியத்துவம்கொடுத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. ஒவ்வொரு துறையும், தங்கள் துறை சார்ந்த பணிகளைச் செவ்வனே செய்துவருகிறார்கள். அந்த வகையில், இன்று விளையாட்டுத் துறையின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி விழா நாளன்று வழங்குவார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!