இ.சி.இ துறையை விரும்பும் பொறியியல் மாணவர்கள்..! | 31,030 seats allocated at the seventh day end of engineering counselling

வெளியிடப்பட்ட நேரம்: 23:33 (29/07/2017)

கடைசி தொடர்பு:23:33 (29/07/2017)

இ.சி.இ துறையை விரும்பும் பொறியியல் மாணவர்கள்..!

பொறியியல் படிப்புக்கான ஏழாவது நாள் கலந்தாய்வின் முடிவில் 31,030 பேருக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. 

பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழத்தில் நடைபெற்று வருகிறது. ஜூலை 17-ம் தேதி தொழிற் பிரிவுக்கான கலந்தாய்வு தொடங்கியது. ஜூலை 23-ம் தேதி பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு தொடங்கியநிலையில் இன்று ஏழாவது நாள் கலந்தாய்வு நடைபெற்றது.  ஏழாவது நாள் கலந்தாய்வில் 7,261 பேருக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது. அதில் 2,390 பேர் கலந்தாய்வில் கலந்து கொள்ளவில்லை.

இதுவரையில் 31,030 பேருக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அதிகமாக இ.சி.இ துறை மற்றும் மெக்கானிக்கல் துறையில் சேர்வதற்கு அதிக ஆர்வம் காட்டுவருகின்றனர். இதுவரையில் இ.சி.இயில் 6,631 பேருக்கும் மெக்கானிக்கலில் 5,191 பேருக்கும் சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரையிலான ஏழு நாள்கள் கலந்தாவில் 27 % பேர் கலந்து கொள்ளவில்லை. அதனால், கடந்த வருடத்தைவிட இந்த ஆண்டு அதிக இடங்கள் காலியாக இருக்கும் என்று கல்வியலாளர்கள் கருதுகின்றனர்.