Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புதுவையை கலக்கும் ரங்கசாமி பிறந்தநாள் போஸ்டர்கள்

புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமியின் பிறந்தநாளை கலர்ஃபுல் பேனர்களுடன் கொண்டாடத் துவங்கிவிட்டனர் அவரது ஆதரவாளர்களும் தொண்டர்களும்.

புதுச்சேரி

புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமியின் பிறந்ததினம் ஆகஸ்ட் 4. அந்த தினத்தை முன்னனி நடிகர்களின் புதுப்பட ரிலீஸ் போல கொண்டாடி விடுவார்கள் அவரது தொண்டர்கள். இதில் சிறப்பே அவருக்கு வைக்கப்படும் ”கட்டிங், ஒட்டிங்” பேனர்கள்தான். ஒபாமா தொடங்கி அனைத்து உலகத் தலைவர்களுடனும் போட்டோஷாப் சர்ஜரி செய்து நெருக்கமாக உலவ விட்டு அசத்துவார்கள். ஒவ்வொரு வருடமும் இந்த பேனர்களைப் பார்க்கவே புதுச்சேரியை ஒரு வலம் வருவார்கள் பொதுமக்கள். ரங்கசாமி காரில் சென்றபடியே ரசித்துக் கொண்டு செல்வார் என்பதுதான் இதில் ஹைலைட். வரும் 4-ம் தேதி ரங்கசாமியின் பிறந்தநாள் என்பதால் களைகட்டத் தொடங்கியிருக்கின்றது மாநிலம்.  இந்த வருடம் சானியா மிர்சாவுடன் ரங்கசாமியைக் களம் இறக்கி ஆட்டத்தைத் தொடங்கியிருக்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement