கச்சதீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் சிறை பிடிப்பு | 4 fisherman arrest near by katchatheevu

வெளியிடப்பட்ட நேரம்: 03:06 (30/07/2017)

கடைசி தொடர்பு:03:06 (30/07/2017)

கச்சதீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் சிறை பிடிப்பு

 கச்சதீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர்.

 இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சிறைபிடித்து செல்வதும் அவர்களது படகுகளை பறிமுதல் செய்வதம் அன்றாட நிகழ்வுகளாக நீடித்து வருகிறது. பாக் நீரிணை பகுதியில் மீன்பிடிக்கும்  ராமநாதபுரம், புதுக்கோட்டை , நாகபட்டினம் உள்ளிட்ட 6 மாவட்ட மீனவர்கள் இதனால் தொழில் இழந்து அவதி பட்டு வரும் நிலை உள்ளது. இந்த பிரச்சனையினை தீர்க்கும் வகையில் பாக் நீரினண பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்களுக்கு மாற்று தொழிலாக அழ்கடல் மீன்பிடிப்பு திட்டத்தினை மத்திய மாநில அரசுகள் கொண்டு வந்துள்ளன.  இந்த திட்டத்தினை பிரதமர் மோடி நேற்று முன் தினம் மண்டபத்தில் நடந்த விழாவில் துவக்கி வைத்தார்.  

தமிழக மீனவர்கள் மீன்பிடி படகுகள்

  இந்த விழாவில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க  விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்தார். இந்நிலையில்  இலங்கை  சிறையில் உள்ள 92 தமிழக மீனவர்களில் முதல் கட்டமாக வவுனியா சிறையில் உள்ள 11 மீனவர்களையும், யாழ்ப்பாணம் சிறையில் உள்ள 66 மீனவர்களையும், நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய  இலங்கை நீதிமன்றங்கள் உத்தரவிட்டதை தொடர்ந்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

 இலங்கை அரசின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று நன்றி தெரிவித்து கடிதம் எழுதியிருந்தார்.. இந்த கடிதம் பிரதமரின் பார்வைக்கு செல்லும் முன்னரே இலங்கை கடற்படையினர் மீண்டும் மீனவர்களை சிறை பிடிக்க  துவங்கி விட்டனர். பிரதமரின் வருகையால் கடந்த 3 தினங்களுக்கு பின் இன்று காலையில்தான் தமிழக மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இந்நிலையில் கச்சதீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ளனர். சிறை பிடித்து செல்லப்பட்ட  மீனவர்கள்  இலங்கை கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்


அதிகம் படித்தவை