Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரஜினி அரசியலுக்கு வர தங்கத்தேர் இழுத்த ரசிகர்கள்

ரஜினி ரசிகர்களும், பாபா ஜி பக்தர்களும் இணைந்து தமிழகத்தில் நிலவும் வறட்சி அகன்று   மழை பெய்யவேண்டும் என்பதற்காக மதுரை அழகர் கோயிலிலுள்ள பழமுதிர்சோலை முருகன் கோயிலில் நேற்று  மாலை தங்க தேர் இழுத்தார்கள். 
   rajini

 தென்மாவட்டத்தில் மழை பொழிவு குறைந்து வெய்யிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் விவசாயம்  பாதித்துள்ளது. இதனால் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து விடுபட ரஜினி ரசிகர்கள் முருகனை  வேண்டி இன்று பழமுதிர்சோலையில் தங்கத்தேர் இழுத்தார்கள். ரஜினி மன்ற நிர்வாகி சுப்புராஜ் தலைமையில் ரஜினி ரசிகர்கள் அழகர் கோயிலுக்கு இன்று மாலை திரண்டு வந்தார்கள். அவர்கள் ரஜினி வணங்கும் பாபாஜியின் படத்தை வைத்து பூஜை செய்தார்கள். பின்பு ரஜினி பெயரிலும் சிறப்பு பூஜை செய்தார்கள். அதன் பின்பு தங்கத் தேரை கோயில் வாளாகத்தில் இழுத்தார்கள். மழைக்கு வேண்டி பூஜை செய்ததாக சொல்லப்பட்டாலும் ரஜினி அரசியலுக்கு விரைவில் வரவேண்டும், அவர் தமிழக முதல்வராக வேண்டும் என்பதற்காக இந்த வேண்டுதலை நிறைவேற்றியுள்ளதாக வந்திருந்த ரசிகர்கள் கூறினார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement