Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னையில் நள்ளிரவிலும் போக்குவரத்து நெரிசல்... கண்டுகொள்ளாத போலீசார்!

சென்னை, அண்ணாசாலை பகுதியில் நள்ளிரவிலும் கூட போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கடைகள், உணவகங்கள் நிறைந்திருக்கும் இந்தப் பகுதியில் வழக்கமாகவே மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும். அதுவும் இன்று சனிக்கிழமை இரவு என்பதால் உணவகங்களிலும், கடைகளிலும் கூட்டம் அதிகமாகவே இருந்தது.

traffiv in chennai

சென்னையின் பிற இடங்களில் 12 மணிக்குள்ளாகவே பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுவிடும். அண்ணா சாலை பகுதியில் இருக்கும் சில கடைகள் மட்டுமே நள்ளிரவுக்கு மேலும் திறந்திருக்கும். அப்படி இன்று அதிகாலை இரண்டு மணி வரையிலுமே இந்தக் கடைகள் திறந்திருந்தன. 

chennai traffic

இதனால் உணவகங்களுக்கு வந்த வாகனங்கள் அண்ணா சாலையிலேயே நிறுத்தப்பட்டன. உணவகங்களுக்கு என ஒதுக்கப்பட்ட பார்க்கிங் ஏரியாவையும் தாண்டி, சாலையின் இருபுறங்களிலும் வாடிக்கையாளர்களின் கார்கள் தாறுமாறாக நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காவல் துறையினர் இதைக் கண்டுகொள்ளாமல், மற்றொரு ஓரத்தில் நின்று லாரிகளை 'கவனித்து' கொண்டிருந்தனர். விதிகளை மீறி நிறுத்தப்பட்டிருந்த கார்களை எதுவும் சொல்லவில்லை. சென்னையின் மிக முக்கியமான சாலையில் எப்படி இந்தளவிற்கு விதிகளை மீறி, வாகனங்களை நிறுத்த போலீசார் அனுமதிக்கின்றனர் என்பது அவர்களுக்கே வெளிச்சம். இதனை நாம் வீடியோ எடுக்கத் துவங்கியதும்தான் கார்களை அங்கிருந்து அப்புறப்படுத்த சொல்லி, வாடிக்கையாளர்களை வலியுறுத்தினர். 

 

வீடியோ: ஜெ.வேங்கடராஜ்

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement