'100 கோடி ரூபாய் இழப்பீடு வேண்டும்': பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக பொங்கும் கிருஷ்ணசாமி!

தமிழகத்தில், பல்வேறு அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியிலும், பிக் பாஸ் நிகழ்ச்சி பரவலாக பேசப்படும் ஒன்றாக மாறி வருகிறது. பல்வேறு சர்ச்சைகளையும் பிக் பாஸ் கிளப்பியுள்ளது. குறிப்பாக, அந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள காயத்ரி ரகுராம், 'சேரி பிஹேவியர்' என்று கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு கடும் கண்டனங்களும் எழுந்தன.

கிருஷ்ணசாமி

இந்நிலையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கோவை சென்றுள்ளார். அங்கு குனியமுத்தூர் பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "குடியரசுத் துணைத்தலைவர் பதவிக்கு, பா.ஜ.க சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வெங்கைய நாயுடு வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். கோபால கிருஷ்ணகாந்தியை விட, வெங்கைய நாயுடு அந்தப் பதவிக்கு தகுதியானர். வெங்கைய நாயுடு வாக்கு பலம் உள்ளவர். 


பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒருவர் 'சேரி பிஹேவியர்' என ஒரு சமூகத்தை இழிவுபடுத்தியதற்கு பொறுப்பேற்று, நடிகர் கமல்ஹாசன் மற்றும் தொலைக்காட்சி நிர்வாகம் மன்னிப்பு கேட்க வேண்டும் என இரண்டு நாள்கள் அவகாசம் அளித்தது இருந்தேன். ஆனால், கால அவகாசம் முடிந்தும் மன்னிப்பு கேட்கவில்லை. இதையடுத்து, கமல் மற்றும் தொலைக்காட்சி நிர்வாகம் உள்ளிட்டோர் மீது ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு தொடர உள்ளேன்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!