பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பான மாநிலம் ‘தமிழகம்’!

பத்திரிகையாளர்களுக்கான பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் உள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

பத்திரிகையாளர்கள்

"ஒரு பத்திரிகை எப்போதும் பயமின்றி பொது வாழ்வின் குற்றங்களை அம்பலப்படுத்த வேண்டும்" என்கிறார் அண்ணல் காந்தி. ஆனால், உண்மையை உலகுக்கு எடுத்துரைக்கும் முயற்சியில் பத்திரிகையாளர்கள் பலர் தாக்குதல்களுக்கு உள்ளாவதும், பல சமயங்களில் கொலை செய்யப்படுவதும் நாடுகள் பேதமின்றி அதிகரித்து வருகிறது. சமூகத்தில் உண்மையை நிலைநாட்ட தங்கள் இன்னுயிரையும் துறக்கின்றனர் பத்திரிகையாளர்கள்.

நாடு முழுவதும் பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை கணக்கில் கொண்டு மத்திய அரசு ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வுத் தகவல்களின் அடிப்படையில் ’பத்திரிகையாளர்கள் சுதந்திரத்தில்’ தமிழகத்திற்கு முதலிம் அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் மத்திய அரசு, தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் மீது எந்தத் தாக்குதல்களும் நடத்தப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. 

மேலும், புதுச்சேரி மாநிலத்திலும் பத்திரிகையாளர்களுக்கு எதிராக எந்தவொரு தாக்குதல்களும் நடைபெறவில்லை எனக் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவிலேயே உத்தரப் பிரதேச மாநிலத்தில் தான் பத்திரிகையாளர்கள் மீது அதிகளவிலான தாக்குதல்கள் நடைபெற்றுளதாகக் கூறப்படுகிறது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!