Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆஹா... இதுவல்லவோ இந்தியா!

நாட்டில் மதக்கலவரங்கள், பசுவின் பெயரால் மக்கள் கொல்லப்பட்டு வரும் நிலையில் அவ்வப்போது சில நம்பிக்கைக்குரிய சம்வங்களும் நிகழ்கின்றன. மத்திய ரிசர்வ் படை சில புகைப்படங்களை ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறது. அதில், ஒரு புகைப்படம் வைரல் ஆகியிருக்கிறது. 'அமைதிக்காக ஆயுதம் ஏந்திய சகோதரர்கள்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள, அந்த புகைப்படத்தில் ராணுவ வீரர் ஒருவர் தொழுகை செய்து கொண்டிருக்க மற்றொருவர் கையில் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு அளிக்கிறார்.  இந்த புகைப்படத்தை ஏராளமானோர் ரீட்விட் செய்துள்ளனர். 'இதுதான் உண்மையான இந்தியா' 'வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியா' என பலரும் கமன்ட் செய்துள்ளனர். 

தொழுகையில் ஈடுபடும் ராணுவ வீரர்

காஷ்மீரில்  2016-ம் ஆண்டு 93 சதவிகிதம் அளவுக்கு வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. தீவிரவாதச் சம்பவங்களும் 19 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ராணுவத்தினர், சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. சில மாதத்துக்கு முன்பு கூட ராணுவ வீரர் ஒருவர் கல்வீச்சில் ஈடுபட்ட காஷ்மீர் இளைஞர் ஒருவரை ஜீப்பின் முன்பகுதியில் கட்டி, மனிதகேடயமாக பயன்படுத்தியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. சில சம்பவங்கள் மனதுக்கு துயரத்தையும் சில மகிழ்வையும் ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற சமூக நல்லிணக்கத்துக்கு உந்து சக்தியாக அமையும் விஷயங்கள் காஷ்மீரில் அமைதிக்கும் வித்ததாக அமைந்தால் நல்லது!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement