Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இரோம் சர்மிளா திருமணம் கொடைக்கானலில் நடப்பது தமிழகத்துக்குக் கிடைத்த பெருமை - சுப. உதயகுமாரன்

"ண்மையும் நேர்மையும் பரிபூரணமான அர்ப்பணிப்பும்கொண்ட ஓர் உன்னதமான போராளி, இரோம் சர்மிளா. அவரின் திருமணம் கொடைக்கானலில் நடப்பது தமிழகத்துக்குக் கிடைத்த பெருமை" என்று பச்சைத் தமிழகம் கட்சியின் தலைவர் சுப. உதயகுமாரன் தெரிவித்துள்ளார்.

இரோம் சர்மிளா

இரும்புப் பெண்மணி இரோம் சர்மிளா, தனது காதலர் தேஸ்மந்த் கொட்டின்கோ-வை  திருமணம்செய்துகொள்ள முடிவெடுத்து, கடந்த ஜூலை ந்ம் தேதி கொடைக்கானல் சார்பதிவாளர் அலுவலகத்தில் மனு கொடுத்திருந்தார். இந்தியத் திருமணச் சட்டத்தின்படி, 'மனுதாரரின் திருமணத்தில் ஆட்சேபனை இருப்பவர்கள், 30 நாள்களுக்குள் தெரிவிக்கலாம்' என்று அவரின் மனு சார்பதிவாளர் அலுவலக அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டது.

அடுத்த நாளே, கொடைக்கானல் பேத்துப்பாரையைச் சேர்ந்த தே.மு.தி.க., பிரமுகர் மகேந்திரன் என்பவர், திருமணம் கொடைக்கானலில் நடப்பதை எதிர்த்து சார்பதிவாளரிடம் மனு அளித்தார். மனுவைப் பெற்றுக்கொண்ட சார்பதிவாளர் ராஜேஷ், எதிர்ப்புக்கான ஆதாரங்களை ஜூலை 28-ம் தேதிக்குள் சமர்பிக்குமாறு அறிவுறுத்தினார். அதன்படி ஆதாரங்களைச் சார்பதிவாளரிடம் சமர்பித்த மகேந்திரன், "அரசின் கவனத்துக்குக் கொண்டுசெல்வதாக சார்பதிவாளர் தெரிவித்தார் " என்றும் கூறியிருந்தார்.

s.p.udhayakumar

இந்நிலையில், இதுபற்றி பச்சைத் தமிழகம் கட்சியின் தலைவர் சுப.உதயகுமாரனிடம் பேசியபோது, 'இந்தியாவில் குடியுரிமைபெற்ற யாரும் இந்தியாவில் எங்கு சென்று வேண்டுமானாலும் திருமணம் செய்துகொள்ளலாம். உண்மையும் நேர்மையும், பரிபூரணமான அர்ப்பணிப்பும்கொண்ட ஓர் உன்னதமான போராளி, இரோம் சர்மிளா. அவரின் திருமணம் கொடைக்கானலில் நடப்பது தமிழகத்துக்குக் கிடைத்த பெருமை. அறப்போராட்டத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குபவை அவரின் போராட்டங்கள். அவரால் கொடைக்கானலுக்கு பாதிப்பு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

குழப்பவாத அரசியல் செய்யும் தே.மு.தி.க கட்சியினருக்கு, அவரைப் பற்றி பேச எந்தத் தகுதியும் இல்லை. தே.மு.தி.க கட்சியின் தலைமை அலுவலகம் கூட மக்களுக்கு இடையூராக உள்ளது. அதற்காக வேறு இடத்துக்கு மாற்றச்சொல்லி மனு செய்வார்களா? ஒரு நாள் மட்டும் கதிராமங்கலத்துக்குச் சென்றுவிட்டு, ''கதிராமங்கலத்துக் கதாநாயகனே' என்று போஸ்டர் ஒட்டிக்கொள்கின்றனர்.

எந்த ஒரு பிரச்னை பற்றியும் தெளிவாக முடிவெடுக்கத் தெரியாத இவர்கள், திருமணம் நடந்தால் ஆபத்து என்று சொல்வது விளம்பரத்துக்காக அன்றி வேறு எதற்கும் இல்லை. இரோம் சர்மிளாவின் நேர்மையையும்  நம்பகத்தன்மையையும் தாக்குவதன் மூலமாக மக்களின் கவனத்தைப் பெறலாம் என்று நினைக்கின்றனர். திருமணம் கொடைக்கானலில் நடப்பதற்கு என் முழு ஆதரவு உண்டு" என்று கூறினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement