Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஓடும் லாரியில் ரேஷன் பொருள்களைத் திருடிய லோடு இறக்கும் நபர்கள்..!

ரேஷன் கடைகளுக்குப் பொருள்களைக் கொண்டுசெல்லும் லாரியிலிருந்து லோடு இறக்கும் நபர்கள் பொருள்களைத் திருடும் காட்சி படமாக வெளியாகியுள்ளது. 

 

'காரைக்குடியிலிருந்து ரேஷன் பொருள்களை ஏற்றிக்கொண்டு, கோவிலூர் ரோட்டில் சென்றுகொண்டிருந்தது லாரி. அதில், ரேஷன் பொருள்களைக் கடைகளுக்கு இறக்கிவைக்கும் லோடு மேன்கள் இருவர் இருந்தனர். அந்த இருவரும் லாரியிலுள்ள மூட்டைகளில் துளையிட்டு, பொருள்களை பிளாஸ்டிக் பையில் எடுக்கும் காட்சி படம் பிடிக்கப்பட்டுள்ளது. 

ரேஷன் பொருள்களை லாரியில் கொண்டுவரும்போதே பாதியைத் திருடினால், அந்த மூடையில் உள்ள பொருள்குறையும். அந்த எடை குறைவு, கடை பொறுப்பாளரைச் சேரும். அவர், அதைப் பொதுமக்களுக்கு வழங்கும்போது குறைத்து, மக்கள் தலையில் கட்டிவிடுவார். அரசு இனியாவது எடைமிஷினொடு ரேஷன் பொருள்களை நியாய விலைக்கடைகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற தவறுகள் நடக்காமல் பாதுகாக்கவும், இதுபோல பொதுமக்களுக்கு வழங்கவேண்டிய பொருள்களைக் கடைக்கு வரும்போதே திருடுபவர்களை இனி லோடுமேன்களாக வைத்திருக்கக் கூடாது. எனவே, தமிழக அரசு உடனடியாக இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும்''என்று கோரிக்கை வைக்கிறார்கள் பொதுமக்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement