Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பா.ஜ.க தன்னுடைய கொள்கைகளைப் புகுத்தப் பார்க்கிறது..! வைகோ கண்டனம்

அப்துல் கலாம் நினைவிடத்தில் பகவத் கீதையை வைத்ததன்மூலம் பா.ஜ.க தன்னுடைய கொள்கையைப் புகுத்தப் பார்க்கிறது என்று வைகோ குற்றம் சாட்டினார். 

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் புறநகர் மாவட்டச் செயற்குழுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வைகோ வருகைதந்தார். அப்போது பேசிய அவர், 'கண்ணியம் மிக்க குடியரசுத் தலைவராகத் திகழ்ந்த கலாம் அவர்களின் நினைவு மண்டபத்தில் பகவத்கீதையை வைத்ததன் மூலம், பா.ஜ.க தன் கொள்கைகளைப் புகுத்த முயல்கிறது. நான் பகவத்கீதையை விமர்சிக்கவில்லை. அதை நம்புகிறவர்கள் இருக்கிறார்கள். ஆனால், பகவத்கீதையில் தமிழ்ப் பண்பாட்டுக்கு மாறான விஷயங்கள் உள்ளன. அப்படியிருக்கும்போது, அனைத்து மக்களுக்கும் பொதுவாக விளங்கிய கலாம் அவர்களின் நினைவுமண்டபத்தில் பகவத்கீதையை வைத்தது தவறு.

இந்த விஷயத்தைக் கண்டித்து நான் பேசியவுடன், கலாம் அவர்களின் அண்ணன் பேரன், திருக்குர்ஆன் மற்றும் பைபிளை வைத்தது தவறு; கலாம், அவர் குடும்பத்தினருக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல என்று கூறியுள்ளார். அனைத்து மத நூல்களும் அங்கிருந்தது என்று சொல்கிறார்கள். சீக்கியர்களின் மத நூலான கிரகந்தத்தையும் புத்தமதத்தின் புனித நூலான தம்மமும் எங்கே? என்னை பொறுத்தவரை அனைவருக்கும் பொதுவான திருக்குறளை வைக்க வேண்டும் என்பதுதான். ஏற்கெனவே சுஷ்மா ஸ்வராஜ் பகவத் கீதைதான் தேசியநூல் என்று முன்பு அறிவித்தார். இப்படி தங்கள் கொள்கைகளைப் புகுத்தப் பார்க்கிறது பி.ஜே.பி. இந்தியா போன்ற மதச்சார்பற்ற தேசத்தில், குறிப்பிட்ட மத நூலை முன்னிலைப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது' என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement