Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அழகிரி மௌனம் எப்போது கலையும்?  

மு.க.அழகிரி, நீண்ட நாள்களுக்குப் பின் நிகழ்ச்சி ஒன்றில் இன்று கலந்துகொண்டார். அரசியல் செயல்பாடுகள் இல்லாமல் சமீபகாலமாக அமைதியாக இருந்துவரும் அழகிரி, நடந்தவற்றை மறந்து, தி.மு.க-வில் இணைவதற்கு எவ்வளவோ முயற்சி எடுத்தும் கடைசிவரை அவரையும் ஆதரவாளர்களையும் சேர்ப்பதற்கு மு.க.ஸ்டாலின் இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை.


 

இந்த நிலையில்தான், முன்னாள் அமைச்சரும் தங்கம் தென்னரசுவின் தந்தையுமான தங்கபாண்டியனின் 20-வது நினைவு நாளான இன்று, அவருக்கு அஞ்சலிசெலுத்த விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறுக்குச் சென்றார், அழகிரி. மதுரையிலுள்ள அவருடைய ஆதரவாளர்களும் விருதுநகர் மாவட்ட ஆதரவாளர்களும் அவருடன் சென்றனர். அங்கு வந்த அழகிரி, யாரிடமும் எதுவும் பேசவில்லை.

அமைதியாக வந்து அஞ்சலிசெலுத்தியவர், அங்கிருந்த செய்தியாளர்களிடம் எதுவும் பேசவில்லை. ''அண்ணன், நீண்ட அமைதியில் இருக்கிறார். நடக்கிற அரசியல் போக்குகளை உற்று கவனித்துவருகிறார். தந்தை கலைஞரும் தாயாரும் உடல் நலமில்லாமல் இருக்கிறார்களே என்ற கவலை அவரை வாட்டுகிறது. விரைவில் அவருடைய அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பார்' என்றனர் அவருடன் வந்த ஆதரவாளர்கள். இதைத் தொடர்ந்து, தி.மு.க மாவட்டக் கழகம் சார்பில் தனியாக அஞ்சலிசெலுத்த வந்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement