Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பொறியியல் கலந்தாய்வு.. ஒரு வார நிலவரம் - எந்தப் படிப்பு மாணவர்களைக் கவர்கிறது?

பொறியியல் கலந்தாய்வு காலதாமதமாக ஆரம்பித்தாலும் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக மாணவர்களின் விருப்பத்தேர்வாக இருந்தது மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பாடம் பின்னடைவை சந்தித்து இந்த ஆண்டு இரண்டாவது இடத்துக்கும், மூன்றாவது இடத்துக்கும் தள்ளப்பட்டுள்ளது. எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் பாடத்தைப் போட்டி போட்டுக்கொண்டு தேர்ந்தெடுத்து முதல் இடத்தைப் பிடிக்க வைத்து இருக்கிறார்கள். கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் ஆர்ப்பாட்டமே இல்லாமல் இரண்டாவது இடத்தைப் பிடிக்க போட்டி போடுகிறது. 

பொறியியல் கலந்தாய்வு

கட் ஆஃப் மதிப்பெண் 200 முதல் 187 வரை உள்ள மாணவர்கள் அதிகளவில் எலெட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் பாடத்தையும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தையும் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். சனிக்கிழமை (29.07.2017) அன்று காலை 183 கட் ஆஃப் மதிப்பெண் பெற்றவர்களுக்கான கவுன்சலிங் நடந்தது. இதில் கலந்துகொள்பவர்கள் எலெட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் பாடத்தையும், மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பாடத்தையும் தேர்ந்தெடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். சென்ற வாரம் ஞாயிறு முதல் சனிக்கிழமை வரை நடந்த கலந்தாய்வின் ஒரு ரீவைண்ட்:- 

கலந்தாய்வில் கலந்துகொண்ட 26,178 பேரில் 21.5% பேர் எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் பாடத்தை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். கம்யூட்டர் சயின்ஸ் பாடத்தை 16% பேரும், மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பாடத்தை 16% பேரும் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். கடந்த நான்கு ஆண்டுகளாக மூன்றாவது இடத்தில் இருந்த எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் பாடம் இந்த ஆண்டு நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இந்தப் பாடத்தை 11% பேர் மட்டுமே தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். கட்டுமானத் துறை வளர்ச்சி மந்தமடைந்த நிலையை சிவில் இன்ஜினீயரிங் பாடத்தில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையிலும் பிரதிபலிக்கிறது. சிவில் இன்ஜினீயரிங் பாடத்தை 7% பேர் மட்டுமே தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். 

இதுவரை, 13,982 மாணவர்களும், 12,196 மாணவிகளும் சேர்ந்திருக்கிறார்கள். இதில் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் பாடத்திலும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்திலும் சேர்ந்திருக்கிறார்கள். மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பாடத்தை 4,144 மாணவர்களும், மிகக்குறைந்த அளவில் மாணவிகளும் (104 பேர்) சேர்ந்திருக்கிறார்கள். 

பொறியியல் கலந்தாய்வு

வேலை வாய்ப்பில் பின்னடைவை சந்தித்து வரும் இன்பர்மேஷன் டெக்னாலஜி துறையில் 7% பேர் தேர்ந்தெடுத்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து கல்லூரி பேராசிரியர்களிடம் விசாரித்த போது 'முன்னணி கல்லூரிகளில் பிற படிப்பில் சேர வாய்ப்பில்லாமல் இன்பர்மேஷன் டெக்னாலஜி பாடத்தை தேர்ந்தெடுத்து இருக்கலாம். ஆனால், இனி, கலந்தாய்வில் கலந்துகொள்ள இருக்கும் மாணவர்கள் இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்பை எப்படித் தேர்ந்தெடுக்கப்போகிறார்கள் என்பதைப் பொறுத்தே இந்தத் துறையின் எதிர்காலம் இருக்கிறது. ஏற்கெனவே பல கல்லூரிகளில் இன்பர்மேஷன் டெக்னாலஜியில் துறையை மூடி விட்டார்கள். இந்த ஆண்டு மாணவர்கள் இன்பர்மேஷன் டெக்னாலஜியில் சேர்வதைப்பொறுத்து அடுத்த ஆண்டு முதல் இன்பர்மேஷன் டெக்னாலஜி துறையைத் திறக்க வாய்ப்புள்ளது' என்கிறார்கள். 

இதுவரை கலந்தாய்வுக்கு 35,965 பேர் அழைக்கப்பட்டதில் 26,178 பேர் கலந்துகொண்டு கல்லூரியில் சேர கடிதம் பெற்றிருக்கிறார்கள். முதல் நாளில் 558 பேர், இரண்டாவது நாளில் 1,204 பேர், மூன்றாவது நாள் முதல் ஏழாவது நாள் வரை, 1,638 பேர், 1,879 பேர், 2,004 பேர், 2,320 பேர் என மொத்தம் 9,603 பேர் (26.7%) கலந்துகொள்ளவில்லை. முதல் நாளில் இருந்து கலந்துகொள்ளாதவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த எண்ணிக்கை இனி வரும் நாள்களில் தொடர்ந்து அதிகரிக்கவே வாய்ப்பு இருக்கிறது. 

பொறியியல் கலந்தாய்வு

அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கங்களாக உள்ள கிண்டி பொறியியல் கல்லூரி, ஏசிடெக், எம்.ஐ.டி. கல்லூரிகளில் 99% இடங்கள் நிரம்பி விட்டன. இதில் பொதுப்பிரிவு, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டு இடங்கள் முழுமையாகவும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினத்தவர் பிரிவில் மட்டும் ஒன்றிரண்டு இடங்கள் மட்டும் காலியாகவும் இருக்கின்றன. இதைப்போலவே, அரசு பொறியியல் கல்லூரிகளிலும், அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் அனைத்து இடங்களும் நிரம்பி உள்ளன. தற்போது மாணவர்கள் சொந்த மாவட்டங்களில் ஓரளவு பெயர் பெற்ற கல்லூரிகளைத் தேர்ந்தெடுத்து சேர ஆரம்பித்து இருக்கிறார்கள். ஆனால், இன்னமும் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரியில் பெரிய அளவில் சேர்க்கை இல்லாமல் இருப்பது யோசிக்க வைக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement