முகப்பூச்சுகளால் கண்களுக்கு ஏற்படும் ஆபத்துகளை எளிதாகத் தடுக்கலாம்!

முகம் பளபளப்பாக வேண்டும் என்பதற்காக கடைகளில் விற்கும் முகப்பூச்சுகளையும் சன் ஸ்க்ரீன் லோஷன்களையும் வாங்கிப் பயன்படுத்தத் தவறுவதில்லை. அவை நம் அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாக மாறிவிட்டது. இவற்றால் பாதுகாப்பும் அழகும் கிடைக்கும் என்பது ஒருபுறமிருக்க அவற்றால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றிய விவாதம் தொடர்கிறது. அவை முகத்தைப் பாதுகாக்கும் என்று மக்கள் நம்பிக்கொண்டிருக்கும் சூழலில் அதைச் சரியாகச் செய்யாவிட்டால் என்னவாகும் என்பது குறித்து இங்கிலாந்தைச் சேர்ந்த `லிவர் பூல்' பல்கலைக் கழகம் ஆய்வு மேற்கொண்டது.

முகப்பூச்சு

இந்த லோஷன்கள் சருமப் புற்றுநோயை ஏற்படுத்தும். 90 சதவிகித சருமப் புற்றுநோய்கள் தலை மற்றும் கழுத்தின் பின்பகுதியிலும் 77 சதவிகிதம் மூக்கு மற்றும் கண்களின் கீழ்ப்பகுதியிலும் 13.5 சதவிகிதம் கண் இமைகளிலும் வருவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இதற்கிடையே இந்த ஆய்வின்போது இதுபோன்ற பிரச்னைகளைத் தடுக்க லோஷன்களைப் பயன்படுத்தும்போது `கூலிங் கிளாஸ்' அணியுமாறு அறிவுறுத்தியுள்ளனர். `கூலிங் கிளாஸ்' கண்ணாடிகள் கருவிழிகளையும் கண்ணிமைகளையும் பாதுகாக்கக்கூடியது என்பதால் புற்றுநோயைத் தடுக்கக்கூடிய திறன் படைத்தது. அதேநேரத்தில் எந்தவொரு லோஷன்களையும் முகப்பூச்சுகளையும் பயன்படுத்துவதற்குமுன் அதை எதற்காகப் பயன்படுத்துகிறோம், எப்படிப் பயன்படுத்துகிறோம் என்று நன்றாகப் புரிந்து கொண்டு செய்ய வேண்டும். அப்படிச் செய்தால்தான் அதன் பலனை நாம் முழுமையாக அடையமுடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!