Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஓர் அம்மாவாக எனக்குப் பயமாக இருக்கிறது - MOM ஶ்ரீதேவி!

மீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த MOM பாலிவுட் படத்தைப் பற்றி மீடியாவில் பேசியபோது, தன்னுடைய பர்சனல் விஷயங்கள் சிலவற்றையும் பகிர்ந்துகொண்டார். 

ஶ்ரீதேவி


ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்கள் என்னை புதிய கதைகளுக்கு ஒப்பந்தமாக உறுதுணையாக இருக்கிறார்கள். அவர்களுக்கு எனது நன்றிகள் என்று தன் சந்தோஷத்தைப் பகிர்ந்திருக்கிறார் நடிகை ஶ்ரீதேவி. 


ரசிகர்கள் நான் இதுவரை நடித்த கேரக்டர்களிலிருந்து மாறுபட்டு புதுக் கதாபாத்திரத்தை எதிர்பார்க்கிறார்கள். சினிமா மக்களை சந்தோஷப்படுத்துவதற்கு மட்டுமல்லாமல், புதுமையான கதைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பையும் கொண்டுள்ளது. Sadma (1983), Chaalbaaz (1989), Chandani (1989) மற்றும் Mr India (1987) போன்ற படங்கள் எனக்கு மிகப் பெரும் அங்கீகாரத்தையும் கொடுத்தது. என்னுடைய தனிப்பட்ட முறையில் சொல்ல வேண்டுமானால், அது போன்ற படங்களே எங்களைப் போன்ற நடிகர்களை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் என நினைக்கிறேன்.


ஒரு அம்மாவாக Jhanvi and Khushi இரண்டு மகள்களுடைய பாலிவுட் பாதை எப்படி இருக்கும் என்பதில் பயம் இருக்கவே செய்கிறது. அவர்களை  நினைத்து கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறேன். இருந்தாலும், நேரம் எல்லாவற்றையும் மாற்றும், அனைத்தையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய பக்குவத்தையும் தருவதோடு, அதைப் பாசிட்டிவாக எடுத்துக்கொள்ளவும், அதில் சிறந்தவற்றைக் கொடுக்கவும் செய்யும். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement