Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’தமிழகம் முழுவதும் போராட்டம் வெடிக்கும்’ - எச்சரிக்கும் சீமான்!     

உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக்கோரி மதுரை காளவாசல் சந்திப்பில் ஆறு வழக்குரைஞர்கள் உட்பட ஒன்பதுபேர், பட்டினிப்போராட்டம் நடத்தி வருகிறார்கள். மொழிக்காகப் பட்டினிப்போராட்டம் நடத்தி விருதுநகரில் சங்கரலிங்கனார் உயிர் துறந்த தினமான  27-ம் தேதி காலவரையற்ற பட்டினிப் போராட்டத்தைத் தொடங்கினர். மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு தொடங்கி வைத்தார். இதுவரை அரசு தரப்பில் யாரும் வந்து இவர்களின் கோரிக்கையைக் கேட்க வராத நிலையில்  ஐந்தாவது நாளாகத் தொடரும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து இன்று ஆதரவு தெரிவித்தார். 

seeman

அப்போது செய்தியாளர்களிடம் பேசும்போது, ''உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் அந்தந்த மாநில மக்களின் மொழி அங்குள்ள உயர் நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக இருக்கும்போது, தமிழகத்தில் மட்டும் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது. மத்திய அரசு உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு, தமிழை உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும். அவ்வாறு செய்யத்தவறினால் தமிழகம் முழுவதும் போராட்டம் வெடிப்பதைத் தடுக்க முடியாது'' என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement