சிறைக்கைதி நல அலுவலர்களை 6 மாதத்தில் நியமிக்க உத்தரவு!

 

hc

வெளியில்தான் வேறுபாடுகள் என்றால் சிறையிலும் பாகுபாடு நிலைதான் என்று நிரூபிப்பதுபோல கர்நாடக சிறையில் கூவத்தூர் கூத்துகளைத் தாண்டி சிறையில் நடந்தவைகள் வீடியோ காட்சிகளாக பரவியது. அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு சிறையை பற்றிய வேறுவிதமான புரிதல் அனைவருக்கும்  ஏற்பட்டது. இந்நிலையில்,

உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விஜய் பூமிநாதன் என்பவர்  பொதுநல வழக்கு ஒன்றைத்  தாக்கல் செய்திருந்தார். அதில் - 2010-ம் ஆண்டு தமிழகத்தில் உள்ள 9 மத்திய சிறைகள், பெண்களுக்கான சிறப்பு சிறைகள், சிறப்பு சிறைப்பள்ளிகள் ஆகியவற்றில் சிறைக்கைதி நல அலுவலர்களுக்கான பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், இன்றுவரை அந்த  அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதனால் வேறு பணி செய்யும் நபர்களுக்கு பணிச்சுமை அதிகமாகிறது. இந்தப் பணிகளை வேறு நபர்கள் செய்தாலும் முழுமையாகவும், சரியாகவும் செய்து முடிக்க முடியாது . இதனால் பல சிக்கல் ஏற்படுகிறது  .

எனவே, அனைத்து மத்திய சிறைகள், பெண்களுக்கான சிறப்புச் சிறைகள் மற்றும் சிறைக்கைதிகளுக்கான சிறப்புப் பள்ளிகளில் சிறைக்கைதி நல அலுவலர்களை நியமிக்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் சொல்லியிருந்தார்  இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு, அனைத்து மத்திய சிறைகள், பெண்களுக்கான சிறப்பு சிறைகள் மற்றும் சிறைக்கைதிகளுக்கான பள்ளிகளில் சிறைக்கைதி நல அலுவலர்களை 6 மாதத்தில் நியமிக்க தமிழக உள்துறைச் செயலருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!