சர்வாதிகாரியாக இருந்தாலும் ஜெயலலிதா...ஜெயலலிதாதான்... கதிராமங்கலத்தில் ஸ்டாலின் புகழாரம்...!

சர்வாதிகாரியாக இருந்தாலும், ஜெயலலிதா, ஜெயலலிதாதான் என்று கதிராமங்கலத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

ஓஎன்ஜிசிக்கு எதிராக கதிராமங்கலம் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இன்று காலை கதிராமங்கலம் வந்த ஸ்டாலின், கதிராமங்கலம் மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

பள்ளி மாணவி மதுமிதா, போராட்டக்குழு உறுப்பினர் கலையரசி, கதிராமங்கலத்தைச் சேர்ந்த கவிதா ஆகியோர் ஸ்டாலினிடம் குடிதண்ணீர் கெட்டுப்போச்சு, விவசாயம் செய்ய முடியல, ஓஎன்ஜிசியை வெளியேற்ற வேண்டுமென ஆவேசமாகப் பேசினர்.  உங்கள் போராட்டம் வெற்றி பெறும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது என்றவர்,  

பின்னர் மேடை ஏறிய ஸ்டாலின், ’அ.தி.மு.க. நான்கு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும்போதும், இல்லாதபோதும் ஜிஎஸ்டிக்கும் எதிர்ப்பு தெரிவித்தார். ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது ஜிஎஸ்டியை கடுமையாக எதிர்த்தவர், உதய் மின்திட்டம், உணவு பாதுகாப்புத் திட்டம் என மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். என்னதான் ஜெயலலிதா சர்வாதிகாரியாக இருந்தாலும், மத்திய அரசு, மாநில அரசைக் கட்டாயப்படுத்திக் கொண்டு வரும் திட்டங்களுக்கெல்லாம் எதிர்ப்பு தெரிவித்தார் என்பதை யாராலும் மறுப்பு தெரிவிக்க முடியுமா? நான்தான் மறுப்பு தெரிவிக்க முடியுமா? உண்மையிலேயே அவர் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், ஜெயலலிதாவால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட திட்டங்களுக்கெல்லாம் அவரது பெயரை சொல்லி ஆட்சி செய்கிறவர்கள் முழு ஆதரவு தந்துள்ளார்கள். தி.மு.க. கொண்டுவந்த திட்டமாகவே இருந்தாலும், மீத்தேன் திட்டத்தை அ.தி.மு.க. அரசு ரத்து செய்ய வேண்டியதுதானே. என்னதான் ஜெயலலிதா, ஜெயலலிதாதான்' என்றார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!