சேமிப்பு கணக்குக்கு வட்டி விகிதம் குறைப்பு: எஸ்பிஐ அறிவிப்பு | Saving account interest rate is reduced, SBI

வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (31/07/2017)

கடைசி தொடர்பு:20:20 (31/07/2017)

சேமிப்பு கணக்குக்கு வட்டி விகிதம் குறைப்பு: எஸ்பிஐ அறிவிப்பு

பாரத ஸ்டேட் வங்கியின், ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவான சேமிப்புக்கு வட்டி விழுக்காடு 4-லிருந்து 3.5 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.

எஸ்.பி.ஐ

பாரத ஸ்டேட் வங்கியின் சேமிப்பு கணக்குகளுக்கான வட்டியில், அரை விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது. ஒரு கோடி ரூபாய் வரையிலான சேமிப்புக்கு 4 சதவிகிதத்திலிருந்து 3.5 சதவிகிதமாக வட்டி விழுக்காட்டைக் குறைத்து பாரத ஸ்டேட் வங்கி முக்கிய அறிவிப்பு ஒன்றை இன்று அறிவித்துள்ளது. மேலும், நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில், கணக்கு வைத்திருப்பவர்களில் சுமார் 90 சதவிகிதத்தினர் ஒரு கோடி ரூபாய்க்கு குறைவாக இருப்பு வைத்திருப்பவர்தான்.

தொடர்ந்து வங்கி சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்தி வந்த நிலையில் வட்டி விழுக்காடு குறைக்கப்பட்டிருப்பது வாடிக்கையாளர்களிடம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாகவே கருதப்படுகிறது. மேலும், சேமிப்புக் கணக்கின் வட்டி விகித குறைப்பை அடுத்து, கடன்களுக்கான வட்டி விழுக்காடும் விரைவில் குறைக்கப்படும் என்ற எதிர்ப்பார்பு முதலீட்டாளர்களிடம் உருவாகியிருக்கிறது. இதனால், பாரத ஸ்டேட் வங்கியின் பங்கு விலை உயர ஆரம்பித்துள்ளது. இந்த வட்டி குறைப்பு, இன்று முதல் அமல்படுத்தப்படுவதாகவும் பாரத ஸ்டேட் வங்கி அறிவித்திருக்கிறது