Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கைத்தறி ஆடைகளுக்காக ஒரு ஃபேஷன் ஷோ: கலக்கும் கோவை மாணவிகள்!

’தேசிய கைத்தறி நாள்’, ஆகஸ்ட் 7-ம் தேதி கொண்டாடப்படுவதை ஒட்டி கோவையில் கல்லூரி மாணவிகளுக்கான கைத்தறி ஆடைகள் அணிவகுப்பு நடைபெற உள்ளது.

கைத்தறி ஆடை அணிவகுப்பு


கைத்தறி ஆடைகளை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7-ம் தேதி கைத்தறி நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு இளைஞர்கள் மத்தியில் கைத்தறி குறித்த விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதற்காக கோவை கல்லூரிகளில் ‘ஃபேஷன் ஷோ’ ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்ச்சியை மக்கள் சேவை மையத்தின் நிறுவனரும் பா.ஜ.க-வின் தமிழகப் பொதுச்செயலாளருமான வானதி சீனிவாசன்  ஒருங்கிணைக்கிறார். இதுகுறித்து அவர் நம்மிடம் பேசும்போது, ‘இன்றைய இளைய தலைமுறையினரிடம் கைத்தறி குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதே இந்த நிகழ்ச்சியின் முதல் நோக்கம். தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் கைத்தறி ஆடை அணிவகுப்பு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு கல்லூரியிலும் நடக்கும் இந்த ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சியில் மாணவிகள் முற்றிலும் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கைத்தறியிலான தாவணி, சேலை போன்ற ஆடைகளே அணிந்து வரவேண்டும். அணிவகுப்புக்குப் பின்னர் கைத்தறி குறித்த பொதுஅறிவுக் கேள்விகள் கேட்கப்படும். இவற்றில் வெற்றிப் பெறுபவர்களில் ஒவ்வொரு கல்லூரியிலிருந்தும் இரண்டு மாணவிகள் தேர்ந்தெடுக்கப்படுவர். இறுதியாக கோவை மாவட்டத்தின் கல்லூரிகளிருந்து தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஆகஸ்ட் 8-ம் தேதி தனியார் கலையரங்கம் ஒன்றில் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. கைத்தறி ஆடைகள், நெசவாளர்கள் என இதுகுறித்த விழிப்பு உணர்வை இன்றைய இளைய தலைமுறை அறிந்துகொள்வதற்காகவே இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close