திருவாரூரில் நம்பி ஆரூராருக்கும் பரவை நாச்சியாருக்கும் கோலாகலத் திருமணம்!

திருவாரூரில் ஆடி சுவாதி விழா நேற்று மக்களின் உற்சாகத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. மாப்பிள்ளை அழைப்பு, பெண்அழைப்பு வரிசைஎடுத்தல், பத்திரிகை அடித்து திருமணம், மொய் வைத்தல், விருந்து படைத்தல் என எம்பெருமானின் நண்பனுக்குத் திருமணம் நடந்தேறியது. திருவாரூரில் 63 நாயன்மார்களில் நால்வரில் ஒருவராக திகழக்கூடிய, சிவபெருமானின் தோழராய் விளங்கும் சுந்தரருக்கும், பரவைநாச்சியாருக்கும் திருமணமானது வெகுவிமரிசையாக முடிந்தது.

திருமணம்

காலை 6 மணிக்கு நம்பி ஆரூராரை நிறைகுடம் கொடுத்து திருவாரூர் புதுத்தெரு, நாலுகால் மண்டபத்திலிருந்து மாப்பிள்ளை அழைத்தல் நிகழ்ச்சியும் 8 மணிக்கு பெண் அழைத்தல் நிகழ்ச்சியும் நடக்க, காலை 9 மணிக்கு மேல் நம்பி ஆரூராருக்கும் (சுந்தரர்) பரவை நாச்சியாருக்கும் திருமணம் நடந்து முடிந்தது.

ஆடி சுவாதி விழா

 

;நேற்று மாலை 6 மணியளவில் நம்பி ஆரூரார் 63 நாயன்மார்களுடன் ஆழித்தேரோடும் வீதியில் 63 நாதஸ்வர இசைக் கச்சேரியுடன் வீதியுலா காட்சியும் நடந்தேறியது. நேற்று மாலை நம்பி ஆரூரார் வெள்ளை யானையில் கயிலாய வாத்தியங்களுடன் வீதியுலா மற்றும் கயிலாயம் செல்லும் நிகழ்வுடன் ஆடி சுவாதிவிழா நிறைவுபெற்றது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!