Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கிணறுகளைத் தூர்வார விவசாயிகளே திரட்டிய பணம்..!

ங்கள் பகுதியிலுள்ள இரண்டு பாழடைந்த கிணறுகளைத் தூர் வாரி பயன்பாட்டுக்குக் கொண்டு வர மக்களே தங்கள் சொந்தப் பணத்தில் ஒன்றரை லட்சத்தை தன்னிறைவு திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்து எல்லோரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளனர். 'எங்கள் ஊருக்கு அதைச் செய்யலை. இதைச் செய்யலை' என்று ஆட்சி அதிகாரத்தை மக்கள் குறை சொல்லிக்கொண்டிருக்காமல், தாங்களே பணம் கொடுத்து கிணறுகளைத் தூர் வாரச் சொல்லி இருப்பது பலத்த பாராட்டைப் பெற்றிருக்கிறது.


கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்டம் முழுக்க இருந்து மக்கள் வந்து தங்கள் குறைகள் அடங்கிய மனுக்களைக் கொடுத்தனர். அப்போது, பள்ளப்பட்டி பேரூராட்சியைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஆட்சியர் கோவிந்தராஜை சந்தித்தனர். அப்போது அவர்கள்,'எங்கள் பேரூராட்சியில்40,000 பேர் வசிக்கிறார்கள். அதில், முக்கால்வாசி பேர் அன்றாடங்காய்ச்சிகள்தான். சாப்பாட்டுக்கே பலருக்கு வழியில்லை. மழையில்லாததால் சரியாக வேலையும் கிடைக்கலை. ஆனால், அதைவிட கொடுமையா குடி தண்ணீர் பிரச்னை மக்களை அல்லாட்டத்தில் தள்ளி இருக்கு.

ஏற்கெனவே பள்ளப்பட்டி வறண்ட பூமி. இதுல வரலாறு காணாத வறட்சி வேறு வாட்டுவதால் நிலத்தடி நீர் மட்டம் எண்ணூறு அடிக்கு கீழே போயிட்டு. இந்தச் சூழலில்தான் இப்போது மழை பெய்யத் தொடங்கி இருக்கிறது. ஆனால், அந்தத் தண்ணீரும் பூமிக்குள்ள போயிடுது. காரணம்,நீர் நிலைகள் தூர் வாரப்படாததுதான். எங்க பேரூராட்சியில் முன்பு நீர் ஆதாரமாக விளங்கியது பட்டாணித் தெரு அருகே ஓடும் நாங்காஞ்சி ஆறு அருகே உள்ள ஒரு கிணறும், தெற்குத்தெரு காயிதே மில்லத் பூங்கா அருகே உள்ள கிணறும்தான். ஆனால், அவை தூர் வாரப்படாததால், கடந்த பத்து வருடங்களாகவே பயன்படாமல் உள்ளது.

அதனால், அந்த இரண்டு கிணறுகளையும் முறையாகத் தூர் வாரி மக்கள் பயன்பாட்டுக்கு மாவட்ட நிர்வாகம் கொண்டு வர வேண்டும். அதற்காகத் தன்னிறைவுத் திட்டத்தின் கீழ் ஒன்றரை லட்சத்துக்கான காசோலையைக் கொண்டு வந்துள்ளோம். இதைப் பெற்றுக்கொண்டு போர்க்கால அடிப்படையில் கிணறுகளைத் தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அந்தக் கிணறுகளைக் கொண்டு எங்களின் தண்ணீர் பற்றாக்குறையைப் போக்கிக்கொள்வோம்" என்றார்கள். இந்தப் பணத்தை பள்ளப்பட்டியைச் சேர்ந்த வாட்ஸ்அப் குழுவைச் சேர்ந்தவர்கள்தான் திரட்டியிருக்கிறார்கள். அந்தக் காசோலையைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் கோவிந்தராஜ் அவர்களை வெகுவாகப் பாராட்டினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close