Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆகஸ்ட் 5-ம் தேதி கோட்டையை நோக்கி பேரணி..! ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் அறிவிப்பு

மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 5-ம் தேதி ஜேக்டோ ஜியோ சார்பில் சென்னையில் கோட்டை நோக்கி பேரணி நடைபெறும் என்று தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தெரிவித்துள்ளது. 

Teachers protest

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய நிர்வாகிகள், 'தொடக்கக் கல்வித்துறையில் கடந்த சில தினங்களாக விதிமுறைகளுக்கு மாறாகவும், அரசாணைகளுக்கு புறம்பாகவும் மாவட்ட மாறுதல்கள் வழங்கப்பட்டு வருவதை வன்மையாக கண்டிப்பதோடு இச்செயலை உடனடியாக நிறுத்த வேண்டும்.   

இந்த கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தியுள்ள பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப உருவாக்கப்படவுள்ள புதிய பணியிடங்களில் ஏற்கனவே பொது மாறுதல் கலந்தாய்வில் பணி நிரவலில்(டெப்புடேசன்) பாதிக்கப்பட்ட ஆசிரியர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும். அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகளை சம்பந்தப்பட்ட ஒன்றியங்களில் உள்ள வட்டார வளர்ச்சி மையங்களில் நடத்தாமல் தொலை தூரப் பகுதிகளில் நடத்துவதை கைவிடுவதுடன், பயிற்சி நடக்கும் வளாகங்களில் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். 

மாவட்டம் முழுமைக்கும் பல்வேறு நிலைகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் பணிவரன்முறைப்படுத்துதல் கோப்புகளை கால தாமதப்படுத்தாமல் விரைந்து முடிக்க வேண்டும். இயக்கத்தின் வட்டாரத் தேர்தல்களை ஆகஸ்ட் மாதத்திற்குள்ளும், மாவட்டத் தேர்தலை செப்டம்பர் மாதத்திற்குள்ளும் முடிக்கவேண்டும். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட திருப்புவனம் ஒன்றியப் பள்ளியின் தலைமை ஆசிரியரை 15 மாதங்கள் கடந்தும் பணி நீக்கத்தை ரத்து செய்யாதது அடிப்படை பணி விதிகளுக்கு முரணான நடைமுறையாகும்.

எனவே மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் உடனடியாக அவரது பணியிடை நீக்கத்தை ரத்து செய்து மீண்டும் பணியமர்த்த வேண்டும்.  மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 5-ம் தேதி ஜேக்டோ ஜியோ சார்பில் சென்னையில் நடக்கும் கோட்டை நோக்கிய பேரணியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள்' என்று தெரிவித்தார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement