Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தனது முதல் டெஸ்ட் போட்டியை ஜிம்பாப்வே அணிக்கு எதிராக விளையாடுகிறது ஆப்கானிஸ்தான்!

ஒருநாள், டி-20 போட்டிகளில் மட்டுமே விளையாடிக்கொண்டிருந்த அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் அணிக்கு கடந்த ஜூன் மாதம் டெஸ்ட் அங்கீகாரம் அளித்தது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில். இரு அணிகளும் தங்களுடைய முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியை விளையாடும் முனைப்பில் இருக்க, முதல் அணியாகத் தனது தொடரை அறிவித்திருக்கிறது ஆப்கானிஸ்தான்.

ஆப்கானிஸ்தான் அணி, தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியை ஜிம்பாப்வே அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்த வருடத்தின் இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 என மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாட இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கு இடையே ஒரு டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டி-20 போட்டிகள் அல்லது 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகள், 3 டி-20 போட்டிகள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிம்பாப்வே - ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் 2017

போட்டிகளில் எண்ணிக்கை மற்றும் நடைபெறவிருக்கும் இடங்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியை ஜிம்பாப்வே அணிக்கு எதிராக விளையாடவிருக்கும் ஆப்கானிஸ்தான் அணியே இப்போட்டித் தொடரை நடத்த விரும்புகிறது. பாதுகாப்பு மற்றும் பிற காரணங்களுக்காக இந்தியா அல்லது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இப்போட்டித் தொடர் நடைபெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆப்கானிஸ்தான் அணி கடந்த பிப்ரவரி மாதம் ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியதும், இலங்கையில் சுற்றுப்பயணம் செய்த ஜிம்பாப்வே அணி முதல்முறையாக இலங்கைக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றி சாதித்ததும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement