எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் அணியினர் அவசர ஆலோசனை!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்குப் பின்னர் அ.தி.மு.க பல்வேறு அணிகளாகப் பிரிந்து செயல்பட்டுக் கொண்டு வருகிறது. சிறையில் இருந்து ஜாமீனில் வெளி வந்த டி.டி.வி தினகரன், இன்னும் 60 நாள்கள் பொறுமையாக இருப்பேன். அதுவரை அணிகள் இணையவில்லை என்றால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பேன் என்றார். 

admk


இந்நிலையில் தினகரன் அளித்த 60 நாள் கெடு வரும் 4 ம் தேதியுடன் முடிகிறது. இதைத் தொடர்ந்து இரு அணிகளும் இணைவது குறித்து அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி 8 அமைச்சர்களுடன் தலைமை செயலகத்தில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றார். இந்த கூட்டதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். அணிகள் இணைப்பு குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.

இதே நேரத்தில், பன்னீர்செல்வம் தன் ஆதரவாளர்களுடன் தனது வீட்டில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். பொன்னையன், மதுசூதனன், மனோஜ் பாண்டியன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

தினகரன் வரும் 5 ஆம் தேதி மாவட்டச் செயலாளர்களின் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். அதற்கு முன்னதாக இரு அணிகளும் இணைப்பு குறித்து முக்கிய ஆலோசனையில் இன்று ஈடுபட்டுள்ளதால், இணைப்பு குறித்து முக்கிய முடிவுகள் எட்டப்படலாம் எனத் தெரிகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!