உள்ளாட்சித் தேர்தல்: உத்தேச அட்டவணை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்!

கடந்த பல மாதங்களாக தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கூறி வந்த நிலையில், இன்று மாநிலத் தேர்தல் ஆணையம், உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான உத்தேச அட்டவணையைத் தாக்கல் செய்தது. 

சென்னை உயர் நீதிமன்றம்

தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் கவுன்சிலர், நகராட்சித் தலைவர் உள்ளிட்ட 1,30,000 பதவியிடங்கள் இருக்கின்றன. இந்தப் பதவிகளுக்காகக் கடந்தாண்டு அக்டோபர் 17 மற்றும் 19-ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதையடுத்து பல்வேறு காரணங்களைக் கூறி மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலைத் தொடர்ந்து ஒத்திவைத்துக் கொண்டிருந்தது. தற்போது வரை உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநிலத் தேர்தல் ஆணையம், உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான உத்தேச அட்டவணையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதையடுத்து, வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!