விஜயபாஸ்கருக்கு அடுத்த நெருக்கடி! சீல் வைக்கப்படுகிறதா கல் குவாரி..?

புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கை வாசலில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்குச் சொந்தமான கல் குவாரிக்கு வருமான வரித்துறையினர் ‘சீல்’ வைக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

விஜயபாஸ்கர்

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த ஊரிலுள்ள சொத்துகளை கடந்த ஏப்ரல் மாதம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது நடந்த சோதனையின்போது கிடைத்த ஆவணங்களை வைத்து தற்போது அமைச்சருக்கு சொந்தமான
100 ஏக்கர் நிலம், கல் குவாரி உட்பட அவருக்குச் சொந்தமான சொத்துகளை வருமான வரித்துறையினர் முடக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வருமான வரித்துறையினரின் உத்தரவின் பேரில் புதுக்கோட்டை மாவட்ட நிலப் பதிவாளர் விஜயபாஸ்கருக்குச் சொந்தமான நிலத்தை முடக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக ஆர்.கே.நகர் தேர்தலின்போது பணப்பட்டுவாடா செய்ததாக எழுப்பப்பட்ட புகாரை அடுத்து சில மாதங்களுக்கு முன்னர், அமைச்சரின் வீடு மற்றும் சொத்துகள் வருமான வரித்துறையினரின் சோதனைக்கு உள்ளானது. இதையடுத்து, தொடர்ச்சியாக சோதனையின்போது கிடைக்கப்பெற்ற ஆவணங்களைக் கொண்டு அதிரடி நடவடிக்கைகள் தொடரும் எனக் கூறப்படுகிறது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!