கமல் ரசிகர் சொல்வது பொய்: பெரம்பலூர் கலெக்டர் பேட்டி!

                              

முட்டை ஊழல் உள்ளதாக கமல் ட்விட் செய்துள்ளார். சத்துணவில் அழுகிய முட்டைகளை பிள்ளைகளுக்கு வழங்கிறார்கள் என்று கமல் ரசிகர் மன்றத்தினர் புகார்கொடுத்திருந்தார்கள். இதனை ஆய்வுசெய்த மாவட்ட ஆட்சியர் சாந்தா, கமல் ரசிகர் மன்றத்தினர் சொல்வது முற்றிலும் பொய் என்று மறுத்துள்ளார்.
கமல் ட்விட்-க்குப் பிறகு சத்துணவுக் கூடங்களில் ஆய்வுசெய்த  பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா பத்திரிகையாளர்களிடம் பேட்டியளித்தார்.

                            

அவர் கூறுகையில், ‘'பெரம்பலூர் மாவட்டத்தில் 376 பள்ளிகளில் நாள் ஒன்றுக்கு 38,284 மாணவர்களுக்குத் தேவையான முட்டைகளை வாரம் இருமுறையாக திங்கள், வியாழன் என இரு தினங்களாக நாமக்கல் பண்ணையிலிருந்து நேரடியாக கொள்முதல் செய்யபடுகின்றன. இவை அனைத்தும் தரமானதாகவும் எடை உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யபட்ட பிறகே சம்பந்தபட்ட பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு முட்டையையும் தண்ணீரில் மூழ்க வைக்கும் பரிசோதனை செய்த பின்னர்தான் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுவருகிறது. பரிசோதனையில் தரமற்ற முட்டைகளை கண்டுபிடித்து அதனை ஒதுக்கி வைத்து விடுவோம். இதுதான் வழக்கம். இதை இன்று வரையிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. லாரிகளில் வரும்போது முட்டைகள் உடைந்துள்ளன. அதைத் தனியாக எடுத்து வைத்திருந்ததை கமல் ரசிகர் மன்றத்தினர் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளனர். சத்துணவு மையங்களில் குழந்தைகளுக்கு அழுகிய முட்டை எதுவும் வழங்கப்படவில்லை’'' என மாவட்ட ஆட்சியர் சாந்தா தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!