இந்து முன்னணி சசிக்குமார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது! | hindu front functionary brutal murder case accust arrested at coimbatore

வெளியிடப்பட்ட நேரம்: 02:09 (02/08/2017)

கடைசி தொடர்பு:14:48 (02/08/2017)

இந்து முன்னணி சசிக்குமார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது!

 

ந்து முன்னணியைச் சேர்ந்த சசிக்குமார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சதாம் என்பவரை சி.பி.சி.ஐ.டி போலீஸார் இன்று கோவையில் கைது செய்துள்ளனர்.

இந்து முன்னணியின் கோவை மாநகர மாவட்ட மக்கள் செய்தி தொடர்பாளர் சசிக்குமார். இவர் கடந்த செப்டம்பர் மாதம் 4பேர் கொண்ட மர்ம கும்பாலால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். கோவையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய இந்த வழக்கை முதலில்  துடியலூர் போலீஸார் விசாரித்து வந்தனர். அதில், முன்னேற்றம் இல்லாததால் அந்த வழக்கு சிபிசிஐடி போலீஸுக்கு மாற்றப்பட்டது.  பலகட்ட விசாரணைக்கு பிறகு கோவை கே.கே.நகரைச் சேர்ந்த ஜாபர் அலியின் மகன் சையது அபுதாஹிர்  என்பவரை கைது செய்தனர். 

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் தீவிரமாக தேடப்பட்டுவந்தார். இந்நிலையில், இன்று மாலை 6 மணியளவில் கோவை கரும்பத்தப்பட்டி அருகே வைத்து சதாம் என்பவரை சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைது செய்தனர். சசிக்குமார் கொலைவழக்கில்  சதாம் தான் முக்கிய குற்றவாளி எனவும்.  நாளை சதாம் நீதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்தப்படுவார் என்றும் போலீஸார் தெரிவித்துள்னர்.   

நீங்க எப்படி பீல் பண்றீங்க