பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி சாரு நிவேதிதா டென்ஷனாக இதுதான் காரணம்..! | This is the reason why Charu Nivedita angry about bigg boss

வெளியிடப்பட்ட நேரம்: 13:59 (02/08/2017)

கடைசி தொடர்பு:13:59 (02/08/2017)

பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி சாரு நிவேதிதா டென்ஷனாக இதுதான் காரணம்..!

சாரு நிவேதிதா

னியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவிரும் பிக்பாஸ் நிகழ்ச்சி பலதரப்பட்ட மக்களிடம் பலவித விவாதங்களைக் கிளப்பிவருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சிதான் இன்று தமிழக மக்களின் ஐ.க்யூவுக்கு அளவுகோல் என்றாகிவிட்டது. மனிதர்களின் உளவியல் பார்வையை வெளிப்படுத்தும் இந்த நிகழ்ச்சி பலதரப்பட்டவர்களிடம் விமர்சனங்களை ஏற்படுத்திவருகிறது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியால் இரவு உணவு பல வீடுகளில் 11 மணிக்கு மேல் என்றாகிவிட்டது. இந்தநோயால் பீடிக்கப்பட்டவர்களுக்கு மருந்துண்டா என்றும் தெரியவில்லை. அப்படி சாமான்யன் முதல் பிரபலங்கள் வரை சகட்டுமேனிக்குப் புலம்பிவருகிறார்கள். ஓவியாவின் தீவிர ரசிகரான எழுத்தாளர் சாரு நிவேதிதா அவ்வப்போது பிக்பாஸ் பற்றி தனது முகநூல் கணக்கில் எழுதிவருகிறார். இன்று அவர், தன் பதிவில் பிக் பாஸ் பங்கேற்பாளர்களில் ஒருவரான கணேஷ் குறித்து தன் கருத்தைக் காரசாரமாக வெளியிட்டுள்ளார். அதில்,  “இந்தப் பத்து பேரில் கணேஷ் யார் வம்புக்கும் போவதில்லை. சண்டை போடுவதில்லை. தன் தலையில் தண்ணீரைக் கொட்டினாலும் வெந்நீரைக் கொட்டினாலும் சும்மா போய் விடுவார். ஆனால், உடம்பு பூராவும் விஷமாக இருக்கிறார் என்பது அவர் தொடர்ந்து ஓவியாவை நாமினேட் செய்யும்போது தெரிகிறது.

ஓவியா

ஓவியா ஜூலியை இழுத்தது தவறுதான் ஆபத்தானதுதான். ஆனால் ஓவியா பற்றி தொடர்ந்து கணேஷ் மட்டுமே அவதூறாக கன்ஃபெஷன் அறையிலும் மற்றவர்களிடமும் பேசுகிறார். ganesh is a very dangerous guy. அப்படிப்பட்ட ஆட்கள்தான் சமூகத்தில் நல்லபடியாக வாழ்கிறார்கள், பிக் பாஸ் வீட்டிலும் அதிகம் நாமினேட் ஆகாமல் இருக்கிறார் என்பதிலிருந்து இதைத் தெரிந்து கொள்ளலாம். இருப்பதிலேயே ரொம்ப நல்லவர் வையாபுரி. அவர் பாருங்கள், பட் பட்டென்று மிகச் சரியாக மனிதர்களை எடை போடுகிறார். அரைகுறை அறிவும் அரைகுறைப் படிப்பும் மனிதர்களை விஷமாக்கி விடுகிறது என்பதற்கு கணேஷ் ஓர் உதாரணம். கணேஷிடம் ஆரவ் சொல்கிறார், ப்ரோ, நமக்கு ஓவியா எரிச்சல் மூட்டுபவராக இருந்தாலும் மக்கள் ஏன் அவரைத் திரும்பத் திரும்ப ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கிறார்கள். அப்படியானால் அவரிடம் இருக்கும் ஏதோ ஒன்று மக்களுக்குப் பிடித்திருக்கிறது என்றுதானே அர்த்தம் என்று ஆரவ் கணேஷிடம் கேட்கிறார். அந்தக் கேள்வி அந்த கணேஷுக்குப் புரியவே இல்லை. வெளியே இந்த நிகழ்ச்சியைப் பார்த்தாலாவது புரியுமா என்று தெரியவில்லை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்