மலேசியாவில் உலகத் தமிழ் இணைய மாநாடு!

உலகத் தமிழ் இணைய மாநாடு, ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடக்கவிருக்கிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மலேசியாவைத் தலைமையிடமாகக்கொண்டு செயல்பட்டுவரும் உலகத் தமிழ் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் உலகத் தமிழ் இணையப் பேரவை இணைந்து நடத்தும் இந்த மாநாட்டில், உலகம் முழுவதிலும் இருந்து தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். மாநாட்டில் கலந்துகொண்டு தங்களது ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்பிக்க இருக்கும் ஆராய்ச்சி மாணவர்கள், தங்களது பெயரை ஆகஸ்ட் 7-ம் தேதிக்குள் பதிவுசெய்வது அவசியம். இந்த மாநாட்டில், தமிழ் இலக்கிய, இலக்கண முன்னேற்றம்குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.

உலகத்தமிழ் இணைய மாநாடு

மேலும், கற்றல் கற்பித்தல் பணிகளில் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் குறித்தும் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட இருக்கின்றன. தமிழை எளிமைப்படுத்தும் வகையில், சொற்பிழை திருத்தி, சந்திப்பிழை திருத்தி உள்ளிட்ட எழுத்துப் பகுப்பாய்வுகுறித்தும் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட இருக்கிறது. ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் தமிழ்த்துறை மாணவர்கள் கலந்துகொள்ளலாம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!