விஜய் சேதுபதிக்கு அடுத்த படம் ரெடி! கிடப்பில் கிடந்த படத்தைத் தூசுதட்டிய தயாரிப்பாளர்!

விஜய் சேதுபதிக்கு, நீண்ட நாள்களாக வெளிவராமல் கிடப்பிலிருந்த படம் ‘புரியாத புதிர்’. ரிலீஸ் ஆகாததற்குப் பின்னணிகூட புரியாத புதிராகவே இருந்தது. ஒரு வழியாக, வரும் செப்டம்பர் 1-ம் தேதி வெளியாக இருப்பதாகத் தகவல் வந்துள்ளது.

புரியாத புதிர், விஜய் சேதுபதி

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, ரமேஷ் திலக் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘புரியாத புதிர். இந்தப் படத்துக்கு, ஆரம்பத்தில் ‘மெல்லிசை’ எனப் பெயர் வைத்திருந்தனர். வலுவான டைட்டில் தேவை என்பதால், படத்தின் டைட்டில் மாற்றப்பட்டது. இந்தப் படத்துக்கான முதல்கட்ட அறிவிப்பை 2013-ம் ஆண்டில் விஜய் சேதுபதி வெளியிட்டார். படமும் 2015-ம் ஆண்டுக்குள்ளேயே ரிலீஸுக்குத் தயாராகிவிட்டது. 

தயாரிப்பு தரப்பிலிருந்த சிக்கல், ஜி.எஸ்.டி பிரச்னை, தயாரிப்பாளர் சங்கம் மற்றும் ஃபெஃப்சி தொடர்பான பிரச்னைகள் காரணமாக, இந்தப் படம் பல மாதங்கள் தள்ளிப்போனதாகச் சொல்லப்படுகிறது. இறுதியாக, கடந்த ஜனவரியில் ரிலீஸ் என அறிவித்திருந்தது படக்குழு. ஆனால், படம் மீண்டும் தள்ளிப்போக, `செம்படம்பர் 1-ம் தேதி படம் வெளியாகும்' என இயக்குநர்  ரஞ்சித் ஜெயக்கொடி உறுதியாகத் தெரிவித்தார்.

தமிழ் சினிமாவில் காலதாமதம் என்பது  நிதர்சனமான உண்மை. ‘புரியாத புதிர்’ போல பல படங்கள் தயாராகியும் வெளியாக முடியாத நிலையில் இருக்கின்றன. அந்த நிலையிலிருந்து இந்தப் படம் மீண்டுவிட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!