'பதவி இழக்க நேரிடும்'- ஜெயக்குமார்- வெற்றிவேல் இடையே கடும் மோதல்

ஜெயக்குமார் தொடர்ந்து டி.டி.வி.தினகரனை விமர்சித்தால், அவர் தனது அமைச்சர் மற்றும் கட்சிப் பதவியை இழக்க நேரிடும், என வெற்றிவேல் எம்.எல்.ஏ எச்சரித்துள்ளார்.  


அ.தி.மு.க அணிகள் இணைப்பு தொடர்பாகப் பல்வேறு கட்டங்களாகப் ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல், "டி.டி.வி.தினகரனை, ஜெயகுமார் விமர்சித்தால்  கட்சி மற்றும் அமைச்சர் பதவியை அவர் இழக்க நேரிடும்" என்று எச்சரித்தார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், "எடப்பாடி பழனிசாமியை தினகரனும் சசிகலாவும் முதல்வராகத் தேர்ந்தெடுக்கவில்லை. எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் சேர்ந்துதான் அவரை முதல்வராகத் தேர்ந்தெடுத்தோம். வெற்றிவேல் எம்.எல்.ஏ காங்கிரஸ் கட்சியிலிருந்து வந்தவர். அங்கு இருக்கும் கோஷ்டி பூசலை இங்கு அனுமதிக்க மாட்டோம். ஓ.பன்னீர்செல்வம் அணியுடனான பேச்சுவார்த்தைக்கு எங்கள் குழு இன்னமும் கலைக்கப்படவில்லை" என்றார்.

சசிகலா, தினகரன் குறித்த கேள்விக்கு, `எந்தப் பதிலையும் அளிக்க விரும்பவில்லை’ என்றார். அணிகள் இணைப்பு விவகாரத்தில், தினகரன் அணி வெற்றிவேலுக்கும் எடப்பாடி அணியின் ஜெயக்குமாருக்கும் மோதல் முற்றி வருகிறது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!