குடும்பத்தினருடன் குலசாமி கோயிலுக்கு விசிட் அடித்த தனுஷ்!

நடிகர் தனுஷ் எவ்வளவு தான் பிஸியாக இருந்தாலும் வருடம் ஒரு முறை தனது சொந்த கிராமமான தேனி மாவட்டம் தேவாரம் அருகில் உள்ள சங்காராபுரம் கருப்பசாமி கோயிலுக்கு வந்துவிடுவார். அதேபோல இன்று தனது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் சிலருடன் சாமி கும்பிட காலையிலேயே வந்துவிட்டார். தனுஷ் - ஐஸ்வர்யா திருமணம் முடிந்தவுடன் நேராக இந்த கோயிலுக்கு வந்து வழிபாடு நடத்திவிட்டுச்சென்றார். பிறகு, தன் மகள் யாத்ரா மற்றும் மகன் லிங்காவிற்கு தலை மொட்டை இங்கேதான் எடுக்கப்பட்டது. எப்போது வந்தாலும் ஊருக்குள் சென்று சொந்தபந்தங்களுடன் நீண்ட நேரம் பேசிவிட்டு வருவது தனுஷின் வழக்கம். தனுஷின் தாய்மாமாக்கள் உட்பட அனைவரும் சங்கராபுரம் கிராமத்தில் தான் வசிக்கிறார்கள்.

சென்னையில் திரையுலகில் பிஸியாக இருந்தாலும் ஊரில் என்ன நடக்கிறது என்று அடிக்கடி அப்டேட் செய்துகொள்வார். முடிந்த வரை நல்லது கெட்டதுகளில் கலந்துகொள்வார். இன்று கோயிலுக்கு வருகை தந்த தனுஷ் குடும்பத்தினருடன், கஸ்தூரிராஜா அவரது மனைவி விஜயலெட்சுமி, அண்ணன் செல்வராகவன் குடும்பம் மற்றும் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் மற்றும் திரைத்துறையில் நெருங்கிய நண்பர்கள் வந்திருக்கிறார்கள். மேலும், நாளை ஊர் மக்களைச் சந்தித்துப் பேசிவிட்டு, விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தனுஷ் வழங்குவார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!